எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, மார்ச் 17  மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்த்து, ஆந்திராவைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரசு சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அதற்கான கோரிக்கையை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒய்எஸ்ஆர் காங்கிரசு எம்.பி.க்கள் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய அதிமுக எம்.பிக்கள், பின்னர் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி.வரபிரசாத் ராவ் கூறியதாவது:

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு கோரி அனைத்துக் கட்சியினருடனும் பேசி வருகிறோம். அதுபோல, அதிமுகவின் ஆதரவையும் நாடினோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே சரி என்று கூறிய அவர், காவிரிப் பிரச்சினையில் தனது கட்சி, தமிழகத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner