எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, மார்ச் 18 சிவசேனா, தெலுங்கு தேசத்தை தொடர்ந்து பாஜகவுக்கு மற் றொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி மிரட்டல் விடுத்துள்ளது.

பாஜக.வின் பெரிய அண்ணன் தோர ணையிலான செயல்பாட்டை அக்கட்சி கண்டித்துள்ளது. இது குறித்து லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வான் எம்.பி. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘‘கூட்டணி கட்சிகளின் கோரிக் கைகளுக்கு பாஜக செவி சாய்க்க வேண் டும். கூட்டணி கட்சிகள் வருத்தத்தில் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக் கையை ஏற்டுத்தவில்லை என்றால் பாஜக.வுக்கு 2019 ஆம் ஆண்டு தேர்தல் பயணம் சிக்கலாக அமைந்துவிடும். கூட்டணி கட்சிகளின் பிரச்சினைகளை பாஜக தீர்க்க முயற்சிக்க வேண்டும். பீகாரில் மாஞ்சி தனது சொந்தப் பாதை யில் பயணம் செய்கிறார். ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாகாவும் மகிழ்ச்சியாக இல்லை. இவை நல்ல விஷயங்கள் கிடையாது'' என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,  ‘‘உ.பி. இடைத்தேர்தல் தோல்வி மற்றும் நாடா ளுமன்றத்தில்நம்பிக்கைஇல்லாதீர் மானம்போன்றவைபாஜகவுக்குகவ லையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்தபின்னர்தனதுசொந்தத் தொகுதி களைகூடதக்கவைத்துக்கொள்ளமுடி யாத நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள் ளது. இது 2019 ஆம் ஆண்டு நாடா ளுமன்றத் தேர்தலை பற்றிய கவ லையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தோல்வியைபற்றி பாஜக கவலை கொள்ள வேண்டியதில்லை. எனினும் பாஜக தேர்தல் தந்திரத்தை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது'' என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறிய பின்னர், சிராஜ் இந்த எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், இடைத்தேர்தல் தோல்வி மூலம் பாஜக கற்க வேண்டிய பாடங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் நம் பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கையெழுத்து இயக்கம் நடத்தி ஆதரவு திரட்டியது. ஏற்கெனவே ஒய்எஸ்ஆர் காங்கிரசு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததற்குப் பதிலடியாக தெலுங்கு தேசம் இச்செயலில் ஈடுபட்டது.

2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு
பா.ஜ.க. தோல்வி

2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு பா.ஜ.க. போட்டியிட்ட அமிருதசரஸ், சிறீநகர், மலைப்புரம், குர்தாஸ்பூர், ஆஜ்மீர், அல்வர், கூலுபெரியா, கோரக்பூர், பூல் புர், அராரியா ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. தொடர்ந்து தோல் வியைத் தழுவியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner