எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரூ, மார்ச் 18  தென் மாநிலங்கள் செலுத்தும் அதிக வரித் தொகையில் இருந்து வட மாநில மக்களுக்கு மானி யம் வழங்கப்படுகிறது என்று கருநாடக முதல்வர் சித்தராமையா தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து சித்தராமையா கூறு கையில்,

வட மாநிலங்களுக்குத் தென் மாநி லங்கள் தொடர்ந்து மானியம் அளித்து வருகின்றன. கருநாடகா, ஆந்திரா, தமி ழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ் டிரா ஆகிய 6 தென் மாநிலங்களும் அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் இந்த மாநிலங்கள் குறைந்த அளவே நிதியைத் திரும்பப் பெறுகின்றன.

எடுத்துக்காட்டாக உ.பி. மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு

1 ரூபாய் வரிக்கும், ரூ.1.79 நிதியை திரும்பப் பெறுகிறது. ஆனால், கருநாடக மாநிலம் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் 47 பைசாவைத்தான் திரும்பப் பெறுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டியது அவசியம். இதை ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் உருவாக்கிய வளர்ச்சிக்கான வெகுமதி எங்கே? அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க  மத்திய அரசு கடும் எதிர்ப்பு

புதுடில்லி, மார்ச் 18 பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12,700 கோடி ரூபாய் கடன் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் ‘‘இந்த மோசடியை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கை மூடி முத்திரை யிடப்பட்ட உரையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்'' என்று வழக்குரைஞர் வினீத் தந்தா என்பவரால் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை நடந்த போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீது அப்போது நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில்,

‘‘விசாரணை அமைப்பு முறையாக விசாரிக்கத் தவறினால்தான் இந்த நடவடிக்கைக்கு செல்லவேண்டும். இதற்கு தேவையானவற்றை அரசு செய்யவில்லை என்றால் தான் மனுதாரர் இங்கே இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.

தலைமை நீதிபதியுடன் நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர். விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில்,

‘‘வாக்குவாதங்கள் மட்டும் நீதிமன்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. நாங்கள் சட்டப்பூர்வமானவற்றை மட்டும்தான் கேட்போம். உணர்வுபூர்வமானவற்றை கேட்கமாட்டோம். ஒரு மனு மீது இது போன்று விவாதம் நடத்துவது சரியான வழிமுறை கிடையாது. இது விளம்பர ஆதாயம் தேடுவதற்காக மட்டுமே செய்யப்படுகிறது. இதன் மீது இன்று நாங்கள் எதுவும் கூறுவதற்கில்லை'' என்றனர்.

இதைத் தொடர்ந்து பொதுநல வழக்கு மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த மனு மீதான எதிர்ப்புகளை அடுத்தவிசாரணையின்போது அட்டர்னி ஜெனரல் தெரிவிக்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

New layer...

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner