எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சம்பந்தம் இல்லையாம்!

ரத யாத்திரைக்கும், விசுவ இந்து பரிஷத்துக்கும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விற்கும் சம்பந்தம் இல்லை.

- அமைச்சர் ஜெயக்குமார்

இவர் எப்பொழுது இந்த இந்துத்துவா சக்திகளின் `ஸ்போக் பர்சன்' ஆனார்? விசுவ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய யாத்திரை என்று சம்பந்தப்பட்டவர்களே அ றிவித்த நிலையில்,ராஜாவை விஞ்சிய விசுவாசியாகி'' விட் டாரோ அ.தி.மு.க. அமைச்சர் (`வாழ்க அண்ணா நாமம்!')

ஒரு கேள்வி

பொதுவாக திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்கள் நடக்கும் ஊர்களில் எல்லாம் இந்த ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி வகையறாக்கள் காவல்துறையினரிடம் சென்று புகார் கடிதம் கொடுப்பதும், அதனை ஏற்றுக்கொண்டு காவல்துறையினர் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதும் சர்வ சாதா ரணமாக நடப்பில் இருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அத்தனைக் கட்சிகளும் (ஆளும் அ.தி.மு.க.வைத் தவிர) புகார் கொடுத்தும், அதனைப் பொருட்படுத்தாமல் ராமராஜ் ஜிய ஊர்லத்துக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

மடியில் கனம் என்பதைத் தவிர வேறு என்னவாம்?

ஒரு சாஸ்திரிதான் கிடைத்தாரா?

தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிக்குப்  புனேயிலிருந்து ஒருவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்துக்குத் தமிழ் நாட்டில் ஒருவர் துணைவேந்தராகக் கிடைக்கவில்லையா? ஆளுநர் புரோகித்தின் கண்களில் பட்டது ஒரு சாஸ்திரி தானா?

வருணம் என்பது இதுதானோ!

2ஜி வழக்கில் ஆ.இராசா, கனிமொழி ஆகியோர் குற்ற மற்றவர்கள் என்று நீதிமன்றத் தால் விடுதலை செய்யப்பட் டனர். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கொலை வழக்கில் 77 பேர் பிறழ் சாட்சி சொன்ன நிலையில், காஞ்சி சங்கராச்சாரி யார்கள் ஜெயேந்திர சரசுவதி யும், விஜயேந்திர சரசுவதியும் விடுதலை செய்யப்பட்டனர். இதன்மீது மேல்முறையீடு செய்ய சட்ட ரீதியாக எவ்வ ளவோ வாய்ப்பிருந்தும், மக்கள் போராட்டம் நடத்தியும் மேல் முறையீடு செய்யப்படவில் லையே, ஏன்?

அதுதான் வருணம் என்பது!

என்ன நடவடிக்கை?

தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தமிழ்நாடு சட் டப்பேரவையில் அறிவித்தார்.

தந்தை பெரியார் சிலை களை சேதப்படுத்துவதற்குத் தூண்டுகோலாக இருந்த ராஜா சர்மாமீது எந்தவித நடவடிக் கையையும் எடுக்காமல், இவ் வாறு பேசுவதெல்லாம் வெத்து வேட்டுதான்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner