எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குப்பைக்  கூடையிலா?

30 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இல்லையாம்!

மத்திய நீர்வளத்துறை செயலாளர்

புதுடில்லி, மார்ச் 22 வருகிற 30- ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்தார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் அளித்து கடந்த மாதம் 16 ஆம் தேதி தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவில் 5 வாரங்கள் முடிந்துவிட்டன. ஆனால், மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று (21.3.2018) டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் வருகிற 30-ஆம் தேதிக்குள் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எழுத்துப்பூர்வமான கருத்துகனை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டு இருக்கி றோம்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த விசயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சரியான தீர்வாக அமையும் திட்டத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner