எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, மார்ச் 22 தேசிய மருத் துவ கமிஷன் மசோதா 2017 மீதான சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை நிலைக்குழு தனது அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இக்குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. எம்.பி. காமராஜ் நீட் தேர்வுக்கு தனது கடும் எதிர்ப்பை தெரி வித்து இருந்தார்.

இதுபற்றி அவர் அந்த அறிக்கையில் கூறி இருந்தாவது:

நீட் தேர்வு நகர்ப்புறங்களில் வசிக்கும்வசதிபடைத்தகுடும் பங்களைச்சேர்ந்த மாணவர் களுக்கு மட்டுமே உதவுவ தாக அமையும். இந்த தேர்வு கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரா னது. நீட் தேர்வு மாணவர்களின் அடிப்படை உரிமைகளையும், மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகளையும்முற்றிலுமாகபறிக் கிறது. அதனால்தான் இந்த தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

மருத்துவ மாணவர்களி டையே சமச்சீரான கல்வித் தரத்தையும், பயிற்சியையும் உயர்த்தவேண்டும்.அதேநேரம் மருத்துவ கல்வி நிறுவனங் களில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வை நடத்தலாம். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.செய்தியும் சிந்தனையும்

இலட்சணமா?

செய்தி: எல்லா மதத்திற்கும் சம உரிமை - முதலமைச்சர் விளக்கம்.

சிந்தனை: இந்திய அரசமைப்புச் சட்டத் தின் மதச்சார்பின்மைக்கு விரோதமாக ராமராஜ்ஜியம் அமைப்போம் என்கிற சட்ட விரோத யாத்திரைக்கு அனுமதி கொடுப்பதுதான் இந்த அரசின் அணுகுமுறையா?

அனைத்து  மதத்திற்கும் சம உரிமை கொடுக்கும் இலட்சணமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner