எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, மார்ச் 23 திருவள்ளுவர் நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல்பகுதி திருவாரூர் தேர் போன்று வடி வமைக்கப்பட்டுள்ளது.

கலை நிகழ்ச்சிகள் போன்று பல் வேறு விழாக்கள் நடத்துவதற்கு ஏது வாக அரங்கங்கள் அமைக்கப்பட்டு  திருக் குறள்கள் அழகுற எழுதப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட் டம்போல் மியான்மா நாட்டில் மான் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து திருவள்ளுவர் நினைவாக சென்னையில் இருப்பது போல் மான் நகரில் வள்ளுவர் கோட்டம் அமைக்க முடிவு செய்தனர்.

தமிழ்க் கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் வகையில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங் களால் முடிவடையாமல் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டு மானப் பணிகள் முடிவடைந்துள்ளது.

வருகிற மே மாதம் 1-ஆம் தேதி இதன் திறப்பு விழா நடக்கிறது. இதுபற்றி மியான்மாவள்ளுவர் கோட்டம் தொடக்க விழா குழு செயலாளர் எஸ்.பார்த்திபன் கூறுகையில், இந்த வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டுள்ள இடம் தலைநகர் யங் கூனில் இருந்து 200 கி.மீ தொலைவில் 9,600 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 1990   இ-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. வருகிற 1-ஆம் தேதி திறப்பு விழா நடக் கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுப்போம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner