எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விவசாயிகள் தற்கொலை இந்தியாவிலேயே  தமிழகத்திற்கு 5 ஆவது இடம்

அய்தராபாத்,மார்ச்23நாடுமுழுவதும் விவசாயிகள்வறட்சிகாலங்களில்பெரும் இழப்புக்கு ஆளாகிறார்கள். அவர் களால் வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகும் நிலையில் தற் கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கருநாடகத்திலும், மத்தியப் பிரதேசம் 3- ஆவது இடத்திலும், தெலங்கானா 4- ஆவது இடத்திலும், தமிழகம் 5- ஆவது இடத்திலும் உள்ளது.

2016- ஆம் ஆண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி தமி ழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற மாநிலங்கள் விவரம் வருமாறு:-

2015-2016- ஆம் ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகள் விவரம் வருமாறு:-

2016- இல் நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என மொத்தம் 11,370 பேர் தற்கொலை செய்து இருக் கிறார்கள். இவர்களில் 5019 பேர் விவசாய தொழிலாளர்கள் ஆவார்கள்.

இதுபற்றி தெலங்கானா விவசாயிகள் சங்க செயலாளர் கொண்டல் ரெட்டி கூறு கையில்,

வறட்சியால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல்தவிக்கும்விவசாயிகள்தற் கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். விவ சாய தொழிலாளர்களும் வேலையின்றி வறுமையில் தற்கொலை செய்கிறார்கள். பல சம்பவங்களில் காவல்துறையினர் சரி யான முறையில் வழக்குப் பதிவு செய் வதில்லை என்றார்.

  

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடில்லி,மார்ச்23அதிநவீனஆற்றல் கொண்ட பிரமோஸ் ஏவுகணை ராஜஸ்தானில் வியா ழக்கிழமைவெற்றிகரமாகசோதிக்கப்பட் டது.  இந்தியா மற்றும் ரஷியாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணையானது சுமார் 290 கிலோ மீட் டர் தொலைவில் உள்ள எதிரிகளின் தளவாடங்களைக்கூட அழிக்கும் திறன் கொண்டது. அதன் இயக்க தூரத்தை 400 கிலோ மீட்டர் வரையிலும் நீட்டிக்க இயலும் என்பது கூடுதல் சிறப்பு.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ரஷியாவின் என்பிஓஎம் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட பிர மோஸ் ஏவுகணையின் மொத்த எடை 3 டன் ஆகும். சுமார் 300 கிலோ எடை வரையிலான வெடி பொருள்களைத் தாங் கிச் செல்லும் திறன் அதற்கு உண்டு. அதைத் தவிர, வேறு சில தொழில்நுட்ப வசதிகளும் அதில் அமைந்துள்ளன. 8.5 மீட்டர் நீளம் கொண்ட பிரமோஸ் ஏவு கணை ஏற்கெனவே பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், போக்ரானில் அமைந்துள்ள ஏவுதளத்தில் பிரமோஸ் ஏவுகணை சோதனை வியாழக் கிழமை நடத்தப்பட்டது. காலை 8.42 மணிக்கு இந்த ஏவுகணையானது விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் செயல்பாடுகள் ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டன. குறிப்பிட்ட நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது பிர மோஸ் ஏவுகணை. இதையடுத்து சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner