எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இலங்கை, மார்ச் 24  தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து இலங்கை மட்டக் களப்பில் எச். இராசா படம் எரிக்கப்பட்டது. விரைவில் தந்தை பெரியார் சிலை திறக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்குக் காரணமானவரான இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரான எச்.ராஜாவின் உருவப்படம் மட்டக்களப்பில் எரிக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 'வல்லினம்'  - 100  பத்திரிகையின் அறிமுக நிகழ்விலேயே எச்.ராஜாவின் படம் எரிக்கப்பட்டதுடன், கண்டியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.

மலேசியாவில் இருந்து வெளிவரும் 'வல்லினம்' சஞ்சிகையின் 100ஆவது இதழ் தொடர்பான அறிமுக உரையாடல், மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில்  23.3.2018  அன்று மாலை  நடைபெற்றது.

அப்போது மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் தலைவர் கணேசன் திலிப்குமார் கூறியதாவது: "கண்டியில் நடைபெற்ற வன்முறைக்கும் தமது அமைப்பின் சார்பில் கண்டனத்தினைத்  தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புகள் நடைபெற்றதற்கு, தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கிறோம்.

அத்துடன், இச்செயலுக்கு காரணமான இந்திய பாரதீய ஜனதா கட்சியின் செயலாளரான எச்.ராஜாவின் உருவப்படம், 'மங்கல' விளக்கேற்றலுக்கு பதிலாக எரியூட்டி எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் எங்களது நிகழ்வினை ஆரம்பித்துள் ளோம்.

தமிழகத்தில் பெரியாருடைய சிலை உடைக்கப்பட்டாலும், இலங்கையின் மட்டக்களப்பில் முதலாவது பெரியார் சிலையினை விரைவில் அமைக்க வுள்ளோம்."

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner