எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லக்னோ, மார்ச் 24 உத் தரப்பிரதேச மாநிலத்தில் பக் தர்கள் சென்ற ஆட்டோ மற்றும் டிரக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தவுலதியா பகுதியில் இருந்து தாம் என்ற இடத்தில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஒரு குழு ஆட் டோவில் சென்று கொண்டி ருந்தது. அவர்கள் சென்ற ஆட்டோ பிரதாப்கர் மாவட்டத் திற்குட்பட்ட பட்டான்பூர் பகு தியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டெம்போ உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோ வில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த அய்ந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து டெம்போ ஓட்டுநர் தப்பி யோடிவிட்டார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி யோடிய ஓட்டுநரையும் காவ லர்கள் தேடி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner