எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, மார்ச்.24- தந்தை  பெரியார் பிறந்த  ஈரோட்டில்  நடைபெறும்  தி.மு.க.  மண்டல மாநாடு புதிய எழுச்சியை உரு வாக்கும் வெற்றி மாநாடாக  அமைந்திட வாழ்த்துவதாக,  தி.மு.க. செயல்   தலைவர்  தளபதி  மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கு திராவிடர்  கழகத்  தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துச் செய்தி  வருமாறு - ஈரோடு மண்டல தி.மு.க.  மாநாடு  அழைப்பிதழ் கிடைத்தது.  மிக்க மகிழ்ச்சி. மிகவும்  முக்கியமான கால  கட்டத்தில்  இந்த மாநாடு நடைபெறுகிறது என்பதில் அய்யமே இல்லை. மதச்சார்பின்மைக்கும், சமூக நீதிக்கும் சவால்கள்    தோன்றியிருக்கும் கால கட்டம் இது. மத்திய -  மாநில  அரசுகள்  தமிழ்நாட்டுக்கு  விரோதமான செயல்களைச்    செய்து முடிப்பதில்  கைகோத்து நிற்கின்றன.

பொது வாழ்வில்  ஒரு சிறு துரும்பையும் அசைத்திராத  கலையுலக நட்சத்திரங்கள்  அரசியலைப்  பதவி  நாற்காலிகளாகக்  கருதி  சுவைத்திட பாமர  மக்களின்  கவர்ச்சி பயன்படும்  என்ற  நோக்கத்தில் தடம்    பதிக்கமுயன்று  கொண்டுள்ளனர்.  இவர்களின்  பின்னணியில்  யார்  இருக்கின்றார்கள் என்பதை நுணுக்கமாகப்     பார்ப்பின் எளிதில் புரிந்து கொள்ள  முடியும். இதற்கிடையே "திராவிடத்தால்   வீழ்ந்தோம்" என்ற குரல்களும் தமிழ்நாட்டில்  ஒலிக்காமல்  இல்லை.  இந்த  நிலையில்   தந்தை   பெரியார் பிறந்த ஈரோட்டில் நடக்கவிருக்கும் தி.மு.க. மண்டல  மாநாடு  எல்லாவகையிலும் பயன் விளைவிக்கும், புதிய எழுச்சியை உருவாக்கும்  மாநாடாக வெற்றிகரமாக  அமைந்திட அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அரும்  பணியில்  ஈடுபடும்  வரவேற்புக்  குழுவினருக்கும்  பாராட்டுகள்! இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் தமது வாழ்த்துச்  செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner