எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'நக்கீரன்' பார்வையில்.....

ராம ராஜ்ஜியம்! ராமராஜ்யத்த மறுபடி இந்தியாவில் நிறுவுறதுதான் இந்த ரத யாத்திரையோட நோக்கமாம்.

ராமராஜ்யம் எப்படி இருந்தது? புராணம் என்ன சொல்லுது?

ராமராஜ்யம் 11 ஆயிரம் வருஷங்கள் நடந்துச்சாம். ராஜ்யத்துக்கு உட்பட்ட மக்கள் மிகுந்த ஆரோக்கியமாவும், ரொம்ப சந்தோஷமாவும் வாழ்ந்தாங்களாம். ராஜ்ஜியத்துல எந்த போரும் நடக்கலையாம்... ராஜ்ய நிர்வாகத்துல எந்த தவறும் நடக்கலையாம். எந்தவிதமான இயற்கைச் சீற்றமும் நடக்கலையாம். அரசர் ராமர், அறவழியிலயே ஆட்சி பரிபாலனம் செஞ்சாராம். ஏன்னா... எல்லா ராஜாக்களும் வாலண்டரியா வந்து ராமரோட தலைமையை ஏத்துக்கிட்டாங்களாம். இப்படி ஒரு ராஜ்ஜியம் இருந்தது உண்மையாயிருக்கட்டும்... இல்ல... பொய்யா இருக்கட்டும். இந்த மாதிரி பிரச்சினைகளே இல்லாத, நோய் பீடிக்காத ஒரு ஆட்சியை நம்மால் கற்பனையாவது பண்ணிப்பார்க்க முடியுமா? ரதம் விடுற புண்ணியவான்களே... இந்த மாதிரியான ஒரு ராமராஜ்யத்த... இந்த நாடு முழுக்க வேணாம்... ஒரே ஒரு ஊர்ல பண்ணிக்காட் டுங்க பார்ப்போம். அதுக்கப்புறம் நீங்க தேரே விடவேணாம். நல்ல ஆட்சி தர்றவங்கள... மக்களே வலிய வந்து போற்றுவாங்க.

நன்றி: 'நக்கீரன்' மார்ச் 24-26

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner