எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தென்னிந்தியாவில் பலமாகக் காலூன்ற ரூ.4,800 கோடியில் `ஆபரேஷன் திராவிடா: தேசியக் கட்சி ரகசிய வியூகமாம்!

தெலுங்கு நடிகர் சிவாஜி பரபரப்பு குற்றச்சாட்டு

திருமலை, மார்ச் 26 தென்னிந்தியாவில் ஆட்சியை பிடிக்க ஆபரேஷன் திரா விடா என்ற பெயரில் தேசியக் கட்சி ஒன்று ரகசிய வியூகம் வகுத்துள்ளதாக தெலுங்கு நடிகர் சிவாஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி. ஆந்திர மாநில பிரிவினையின்போது ஒருங்கிணைந்த ஆந்திராவிற்காக போராட்டம் செய்து வந்தார். அதன் பின்னர் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி கூட்டு நடவடிக்கைக் குழு என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற் படுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில் தென்னிந்தியாவில் ஒரு தேசிய கட்சி பலமாக காலூன்ற ஆபரேஷன் திராவிடா என்ற பெயரில் வியூகம் வகுத்திருப்பதாக கூறி 20 நிமிட வீடியோ காட்சியை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மன்னர்கள் காலத்தில் அண்டை நாடுகளைப் பிடிக்க மன்னர்கள் வியூகம் வகுப்பதுபோல் தற்போது தேசியக் கட்சி ஒன்று திட்டம் வகுத்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் டில்லியைச் சேர்ந்த நண்பர்கள் மூலமாக அரசியல் குறித்து தெரிந்து கொண்டு வருகிறேன். கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த தேசியக் கட்சியில் உள்ள நண்பர் ஒருவர் மூலம், அக்கட்சி வகுத்துள்ள வியூகத்தின் முக்கிய நபர்களில் ஒருவராகவும் உள் ளார். அவரின் பெயரை நேரடியாகக் கூற முடியாவிட்டாலும் அவரை கல் யாண்ஜி என்றே அழைப்பேன்.

தேசியக் கட்சி தென்னிந்தியாவில் பலமாகக் காலூன்ற ஆபரேஷன் திராவிடா என்றொரு திட்டத்தை வைத் திருப்பதாகவும் தமிழ்நாடு, கேரளா மாநிலத்திற்கு ஆபரேஷன் ராவணா என்றும், ஆந்திரா, தெலங்கானாவிற்கு ஆபரேஷன் கருடா என்றும், கர்நாடகா மாநிலத்திற்கு ஆபரேஷன் குமாரா என்றும் வியூகம் வகுத்துள்ளதாக தெரி வித்துள்ளார்.

குமாரா என்றால் ராஜ்குமாரை முன்வைத்தும், ராவணா என்றால் ராவணனை குறிக்கும் விதமாகவும், கருடா என்றால் திருப்பதி கோயிலை வைத்து இந்தப் பெயர்களை தேசியக் கட்சி ரகசியமாக அறிவித்துள்ளது. இந்தஆபரேஷன்மூலம்தேசியக் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளும்கட்சியினர்மீது சிபிஅய் வழக்கு தொடர்வது, ஏற்கெனவே உள்ள சிபிஅய் வழக்குகளை மீண்டும் கையில் எடுப்பது, பொருளாதாரத்தில் பலவீனப்படுத்துவது உள்ளிட்டவை முக்கிய திட்டங்களாக உள்ளன. மேலும் எதிர்க்கட்சிகள்மீது ஏற்கெ னவே உள்ள வழக்கின் மூலம் அந்த கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப் புவது ஆகிய திட்டங்கள் அடங்கும். புதியதாக கொண்டு வரக்கூடியவர் மூலம் மாநில நலனிற்காக குரல் கொடுத்து போராட வைத்து அவர் மூலம் தேர்தலைச் சந்திப்பது, வெற்றி பெற்ற பிறகு அந்த புதிய நபருக்கு மத்திய அமைச்சர் பதவியை தருவதாகக் கூறி அவரை கட்சியைவிட்டே அனுப்பி தேசிய கட்சியை சேர்ந்தவர்கள்மூலம் தென்னிந்திய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பதே வியூகத்தின் அடுத்த விதி. இந்த திட்டங்களை செயல்படுத்த தேசியக் கட்சி ஒதுக்கியுள்ள நிதி ரூ.4,800 கோடியாம். இதற்காக அந்தக் கட்சியைச் சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்களாம். ஏற்கெனவே இதற்கான பணம் அந் தந்தமாநிலங்களுக்குஅனுப்பிவைக்கப் பட்டுள்ளது என நண்பர் தெரிவித் துள்ளார்.

தென்னிந்தியாவில் மதம், ஜாதி ரீதியாக வன்முறைக் கலவரங்களைத் தூண்டியும் ஆட்சியை கலைக்கும் முயற்சிகளும் இதில் உள்ளன. இந்தத் தகவல் 2017ஆம் ஆண்டே எனக்கு தெரியும். ஆனால் அப்போதைய சூழலில் நான் தெரிவித்தாலும் அதை யாரும் நம்பும் நிலையில் இல்லாமல் இருந்தனர்.

ஆனால், அந்த தேசிய கட்சியின் மூலம் தற்போது அரங்கேறி வரும் காட்சிகளை மக்கள் பார்த்து வருவ தால்தற்போதுஇந்தத்தகவலைதெரி விக்கிறேன். இந்தத் தகவல் வெளி யானால் அந்த தேசியக் கட்சி இந்த திட்டத்தைமாற்றம்செய்தாலும்செய் யலாம்.எப்படியும்ஏதாவதுஒரு வழியில் 2019ஆம் ஆண்டை குறிக் கோளாக வைத்து பல்வேறு வழிகளில் ஆபரேஷன் திராவிடாவை செயல்படுத்தும். இவ் வாறு அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ஆந்திரா மட்டும் அல்லாமல் தென்னிந்தியாவில் உள்ள ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner