எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இராமாயணமும், பாரத மும் கற்பனைக் காப்பியங்கள் என்றால் நம்மீது சினம் கொள் கிறார்கள். அப்படிப்பட்ட போர் நடந்தது என்று காட்ட எந்த வரலாற்றுத் துறை அறிஞராலும் இயலாது என்று சொன்னால், கோபம் கொள்கிறார்கள். நாம் கொடுக்கும் ஆதாரங்களை வேண்டுமானால் மறுத்துப் பேசட்டும்-ஆனால், ஆனந்த விகடன்' ஆங்கில ஏடுமெயிலி'லிருந்து எடுத்து வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கத்தினை இங்கு தருகிறோம். இதன் பின்பாவது குழப்பவாதிகள் தெளிந்தால் சரி.

எவ்வளவு நாட்கள்தான் ஏமாற்றினாலும் எதிரிகள்கூட நம் கருத்துக்குத்தான் வந்து தீரவேண்டியிருக்கிறது.

இதோ படியுங்கள்.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே குருக்ஷேத்திரத்தில்ஒரு பிரமாண்டமானபோர் நடந்த தாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின் பின்னணி யில்பார்த்தால்அந்தமகா பாரத யுத்தத்தை உண்மை யான சரித்திர சம்பவமாகக் கருத முடியாது.

அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன் றுமில்லை.

கி.மு.1100-க்கு முன்பு இரும்பு என்றால் என்ன வென்று தெரியாத நிலை. போர்க் கருவிகள்பற்றிக் குறிப்புகள் வருகின்றன.

இராமாயணம்,மகாபாரதம்இரண்டிலும்அவ்வப் பொழுது பல சமஸ்தான கவிஞர்கள்தங்கள் கைவரிசையைக்காட்டிப் பலவற்றைப் புகுத்தி'யிருக் கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் எழு தப்பட்டவையே.''

ஆதாரம்: 12.10.1975 நாளிட்ட ஆனந்த விகடன்'

பஞ்சதந்திரம்அராபியன் நைட் போன்ற கற்பனைக் கதைதான் இராமாயணம், மகாபாரதம் என்று ஜவகர் லால் நேருவும், டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியார்கூட புராணங்கள்' எனும் தலைப்பில் என்ன சொல்லுகிறார்?

கடலினைத் தாவும் குரவும் - வெங்

கனலிற் பிறந்த தோர் செவ்விதழ்ப்

பெண்ணும்

வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில்

வஞ்ச சமன் செயும் குட்டை முனியும்

என்ற பாடல் வரிகளைத் தொடர்ந்து,

கவிதை மிக நல்ல தேனும் அக்

கதைகள் பொய்யென்று

தெளிவுறக் கண்டோம்

என்கிறாரே பாரதி.

இது ஈரோட்டுச் சரக் கல்ல - சிந்திப்பீர்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner