எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோலாலம்பூர், மார்ச் 27 சிலாங்கூர் மாநிலம், காப்பார் நகர் அருகில்  அமைந்துள்ள பிராப்படன் தோட்ட தேசிய வகை தமிழ்ப் பள்ளியில் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியாரின் பெயரில் நூலகம் அதிகாரப்பூர்வமாக திராவிடர் இயக்கப் பணியாளர் மு.கோவிந்தசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.சுசீலா முனியாண்டி அவர்கள் முன்னிலை வகித்தார். பெரியார் நூலகத் திறப்பு விழாவில் பள்ளி ஆசிரியர்களும், மாணவ, மாணவியர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மலேசியத் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் பெரியார் பெருந்தொண்டர் இரா.பெரியசாமி, பெரியார்பெருந்தொண்டர் கோ.ஆவுடையார், பெரியார் பெருந்தொண்டர் பகுத்தறிவுப் பாவலர் கு.க.இராமன், கு.கிருட்டிணன், கழகச்சுடர் த.பரமசிவம், க.விநாயகம் மற்றும் பலரும் கலந்துச் சிறப்பித்தனர். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் துணையுடன் இந்நூலகம் அமைக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner