எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

>> இராமநவமி ஊர்வலத்தின்போது கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்லவேண்டும் என்று பகவான் இராமர் கூறியுள்ளாரா? - மம்தா பானர்ஜி, மே.வங்க முதலமைச்சர்.

(சூத்திரன் சம்பூகனை இராமன் வாள் கொண்டு வெட்டினானே - அதன் அடையாளமாக எடுத்துச் செல்லுகிறார்களோ, என்னவோ!).

>> பிரதமர் மோடி மற்றும் பி.ஜே.பி.யினர் அம்பேத்கரின் பெயரைச் சொல்லி ஏமாற்றுகின்றனர் - மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி.

(அணைத்து அழிப்பது ஆரியம் என்பது தெரிந்த வரலாற்றுச் செய்தியே!).

>> முசுலிம் ஆண்கள் பலதார மணம் செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. (இந்துக் கடவுள்கள் பலதார திருமணம் செய்துள்ளார்களே, குறிப்பாக சிவனுக்கே இரு மனைவிகள்; இதையும் சேர்த்துத் தடை செய்தால் புண்ணியமாக' இருக்கும்).

>> மாநிலங்களவைத் தேர்தலில் உ.பி.யில் கட்சி மாறி வாக்களித்த பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

(வருமான வரி ஏய்ப்புப் புகழ் ராம்தேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவில்லையே!).

>> பாலியல் தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்ள பள்ளி மாணவிகளுக்கு மேகாலயாவில் கராத்தே பயிற்சி!

(துப்பாக்கிப் பயிற்சி கொடுக்கவேண்டும் என்று ஏற்கெனவே திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதே!).

>> கேரள மாநிலத்தில் குண்டுவெடிப்பில் கால் இழந்தவர் 18 ஆண்டுகளுக்குப் பின் டாக்டர் ஆனார். (தலையெழுத்தல்ல - தளரா தன்முயற்சியின் வெற்றி!).

>> கடப்பாரையால் நெம்பினாலும் அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

(ஆமாம், வெளி சக்தி தேவையில்லை - அவர்களுக்குள்ளேயே கவிழ்ப்பு நடைபெறும்).

>> அரசு சார்பில் 86 இணையர்களுக்குத் திருமணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.

(சுயமரியாதைத் திருமணத்துக்கு அண்ணா சட்ட வடிவம் கொடுத்த நிலையில், அண்ணா பெயரில் கட்சியையும், ஆட்சியையும் வைத்துக்கொண்டுள்ளவர்கள் புரோகிதர்களை அழைத்துப் பச்சைப் பார்ப்பனத்தனமாக விவாஹ சுப முகூர்த்தத்தை நடத்தியது தலைகுனியத்தக்கதாகும். அதேநேரத்தில், ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் 117 இணையர்களுக்கு சுயமரியாதைத் திருமணமாக தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner