எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பீகார் மாநிலம், தர்பாங்கா பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தினருடன் அப்பகுதி யில் உள்ள துர்கா கோயிலுக்குச் சென்றுள்ளார்.  அப்போதுயாரும்எதிர் பாராத வண்ணம் தன் கண் களில் ஒன்றை கைகளினால் தோண்டிஎடுத்து,அதனை காணிக்கையாக கடவுளுக்கு அளிப்பதாகக் கூறி, உடனடியாக தனதுஇடதுகண்ணைவிரல் களால் தோண்டி எடுத்துவிட் டார். இதனால் அந்தப் பெண் ணின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்ணின் தோண்டியெ டுக்கப்பட்ட கண்ணிலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக் களும் செய்வது அறியாது திகைத்தனர்.பின்னர்,அந்தப் பெண்ணைஅருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பெண்ணிற்கு நீண்ட நாள்களாக திருமணம் நடைபெறாமல் இருந்துள்ளது. மேலும் இவருக்குப் பார்த்த மணமகன்கள் இவரை திரு மணம் செய்யமாட்டேன் என்று கூறி சென்று விடுகின்றனர். இதனால், அந்தப் பெண் தனக்குத் திருமணம் செய்ய உதவுமாறு கடவுளிடம் கூறி, அதற்குதட்சணையாகதனது கண்ணைக் காணிக்கையாக்கி யுள்ளார்.  இதுதொடர்பாகஅவரது உறவினர் ஒருவர் கூறும் போது, கண்களை காணிக்கை யாக்கிய பெண் நீண்ட நாள் களாக திருமணம் ஆகாமல் இருந்ததால் ஒருவித மனவிரக் தியில் இருந்தார் என்று கூறினார்.  பெண் இடது கண்ணை விரலால் நோண்டி எடுக்கும் போது, அவரது விழி நரம்பு களும் பாதிப்படைந்து விட்டது. ஆகையால், அவரது வலது கண்ணின் விழித்திரையும் பார்வை உணரும் தன்மையை இழந்துவிட்டன. சிகிச்சையால்  இதை சரி செய்ய முடியாது. ஆகையால், இனி அவர் இருக் கும்வரை பார்வையிழந்த நிலையில் இருப்பார் என்று மருத்துவர்கள் கூறினர்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் சொன்னாரே - அது எத்தகு உண்மையின் முழு வடிவம் என்பதை இப்பொழுதாவது உணர்ந்தால் சரி.

சிவனடியாரான கண்ணப் பன், தன் கண்ணைத் தோண்டி சிவனுடைய கண்ணில் பொருத் தினானாம்.

இத்தகு மூடத்தனங்களில் நம்பிக்கை வைக்கும் நாட்டில் என்னதான் நடக்காது?

அது சரி, கடவுளுக்குக் காணிக்கையாகத்தானே, தனது கண்ணைப் பிடுங்கினார் அந் தப் பக்தை - அந்தக் கடவுள் தடுத்தாட் கொள்ளவில்லையே ஏன்?

கண் மருத்துவரை நாடித் தானே செல்ல வேண்டியுள்ளது.

கடவுளை மற -

மனிதனை நினை!

- தந்தை பெரியார் - மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner