எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 28 கருநாடகத் தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பாகவே, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் வெளியிட்டார். இது நாடு முழுவதும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் பாஜக-வின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று ஏற்கெ னவே வலுவான புகார்கள் இருந்துவரும்நிலையில்,தற் போதுஆணையத்தைமுந்திக் கொண்டு, அமித் மாளவியா தேர்தல் தேதியை வெளியிட்ட தன் மூலம் பாஜக, - தேர்தல் ஆணையம் இடையிலான ரகசியக் கூட்டு அம்பலமாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

224 உறுப்பினர்களை கொண்ட கருநாடகசட்டப்பேர வைக்கான தேர்தல் தேதியை, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்ஓம்பிரகாஷ்ராவத், அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க் கிழமையன்று காலை 11 மணி யளவில் ஊடகங்கள்முன்பு அறிவித்தார். ஆனால், ராவத் அறிவிப்பு வெளியிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின்தலைவர்அமித்மாள வியா, கருநாடக சட்டப்பேர வைக்கு மே 12- ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இது எதிர்க்கட்சிகளையும், ஊடகங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனிடையே, அதிகாரபூர்வமாகதேர்தல்அறி விப்பை வெளியிட்ட தலை மைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்திடம், அமித் மாளவியாவின் ட்விட்டர் பதிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கருநாடகத் தேர்தல் தேதியை, நீங்கள் (தேர்தல் ஆணையம்)அறிவிக்கும்முன் னரே பாஜக-வின் தகவல் தொழில்நுட்பப்பிரிவுத்தலை வர்அமித்மாளவியா,சமூக வலைதளத்தில் அறிவித்துள் ளாரே அது எவ்வாறு நடந்தது? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு, நேரடியாக பதில் எதையும் தெரிவிக்க முடியாத ராவத், தேர்தல் அறிவிப்புகள் குறித்த சில விஷயங்கள்கசிந் துள்ளன; அதற்கான நடவடிக் கைகள்சட்டப்பூர்வமாகவும், நிர்வாகரீதியாகவும்எடுக்கப் படும் என்று மட்டும் சமாளித் தார்.

ஆனால், தேர்தல் ஆணை யத்தின் ரகசிய தகவல்கள் பாஜகவினருக்கு எப்படிக் கிடைத்தது? பாஜக, சூப்பர் தேர்தல் ஆணையமாக செயல்படுகிறதா? அப்படியானால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கள்மீது எதிர்க்கட்சிகள் எவ்வாறு நம்பிக்கை வைத்திருக்க முடி யும்? என்று காங்கிரசு அடுக்கடுக் கான கேள்விகளை எழுப்பியது. இந்தப் பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்தவேண்டும்; பாஜக நிர்வாகி அமித் மாளவியா மீது காவல்துறையும் வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று காங்கிரசு மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner