எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மார்ச் 28 மிக மோச மான ஊழல் ஆட்சி நடத்தியது யார்? எனும் போட்டி வைத்தால், அதில் எடியூரப்பாதான் முதலி டம் பிடிப்பார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா-வே கூறியிருப்பது, பாஜக வட்டாரத்தில் பதற்றத்தை ஏற் படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவில் கருநாட காவில்தான் பாஜக முதன் முதலில் 2008-ஆம் ஆண்டு ஆட் சியைக் கைப்பற்றியது. ஆனால், சட்டவிரோத சுரங்க அனுமதி புகாரில் சிக்கி, அப்போதைய முதல்வர் எடியூரப்பா பதவியை இழந்தார். சிறையிலும் அடைக் கப்பட்டார். பாஜகவும் அவரை கைவிட்டது.இதனால்,கோபத் தில் பாஜகவைவிட்டு வெளி யேறி தனிக்கட்சி ஒன்றையும் எடியூரப்பா துவங்கினார். ஆனால், ஊழல் பேர்வழியே ஆனாலும்,கருநாடகத்தில்வேறு ஆளில்லாததால், எடியூரப் பாவை மீண்டும் கட்சியில் பாஜக சேர்த்துக் கொண்டது. தற்போது, மே 12- ஆம் தேதி நடைபெறும்கருநாடகாசட்டப் பேரவைத்தேர்தலில்,பாஜக -வின் முதல்வர் வேட்பாளராக வும் வலம்வந்து கொண்டிருக் கிறார்.அவருக்கு வாக்கு சேக ரிப்பதற்காக,பாஜகதேசியத் தலைவர்அமித்ஷாகருநாடகத் திலேயே கூடாரம் அமைத்துள் ளார். இந்நிலையில், பெங்களூரு வில் செவ்வாய்க் கிழமையன்று செய்தியாளர்களை அமித்ஷா சந்தித்தார்.அப்போது,கருநாட காவில் ஆளும் காங்கிரசு கட்சியை, அமித்ஷா மிகக்கடு மையாக விமர்சித்தார். அப் போது உணர்ச்சிவசப்பட்ட அவர், மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுக்குத்தான் முதலிடம் கிடைக்கும் என்று கூறிவிட்டார். இதனைக் கேட்ட பத்திரிகை யாளர்களும், அமித்ஷா உடனிருந்த பாஜகவினரும் அதிர்ச்சிஅடைந்தனர்.எடியூரப் பாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச்சொன்னால்,இருக் கும் வாக்குகளையும் குறைப்ப தற்கு அமித்ஷா முடிவு செய்து விட்டாரா என்று சந்தேகம் அடைந்தனர்.

எனினும், எடியூரப்பா அரசு அல்ல; சித்தராமையா அரசு என்று அவர்கள் சமாளித்தனர். இதனிடையே, அமித்ஷாவின் உள்ளத்தில் இருப்பதுதான் உதடுகள்மூலமாகவும்வெளிப் பட்டுள்ளதுஎன்றுகூறி,அமித் ஷாவின்பேச்சுஅடங்கிய வீடியோவை சமூக வலைத்தளங் களில் பரப்பி, காங்கிரசு கட்சி யினர் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner