எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, மார்ச் 29 உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு அம்பேத்கர் பெயரில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அரசு கோப்புகளில் பாபாசாகேப் பீமாராவ் அம் பேத்கர் பெயர் இடம்பெறுகின்ற இடத்தில் எல்லாம் ராம்ஜி என்று சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ராம்நாயக் பரந்துரையின் பேரில், சாமியார் யோகி ஆதித்யநாத் அரசு அரசு அலுவல கங்களுக்கு ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அரசு ஆவணங்களில், அனைத்து உத்தரவுகளிலும் அம் பேத்கர் பெயரை பயன்படுத்தும்போது ராம்ஜி என்ற சொல்லை பெயருக்கு இடையில் சேர்த்தே பயன்படுத்த வேண்டும். அதாவது உத்தரப்பிரதேச மாநில அரசு ஆவணங்களில், கோப்புகளில், அரசு சார் செயல்பாடுகளில் பாபாசாகேப் பெயரில் ராம்ஜி' என்பதை கட்டாயம் பயன்படுத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பீமாராவ் அம்பேத்கர்' என்பதில் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்' என்றே குறிப்பிடப்பட வேண்டும் என்று மாநில அரசின் ஆணையில் கட்டாயப்படுத்தியுள்ளதாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner