எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 29 சிபிஎஸ்இ பள்ளிகளில்10ஆம்வகுப்பு கணக்குபாடம் மற்றும் 12ஆம் வகுப்பு பொருளாதாரப் பாடங் களுக்கு மறு தேர்வு நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித் துள்ளது.

சிபிஎஸ்இ அறிவிப்பு

சிபிஎஸ்இ இணையதளத் தில், தேர்வு மய்யங்களில் முறைகேடுகள் குறித்த புகார்கள் வரப்பெற்றதை அடுத்து மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடவடிக்கை எடுத்து வருகிறது. முறையாக தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், மாணவர் நலனுக்காகவும் 12ஆம் வகுப்பு பொருளாதார பாடத்திற்கும், 10ஆம் வகுப்பு கணக்கு பாடத்திற்கும் மறு தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது. சிபி எஸ்இ இணையதளத்தில் ஒரு வார காலத்திற்குள்ளாக மறு தேர்வுக்குரிய விவரங்கள் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கு முன்பே... தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்தது குறித்து வெளிப்படையாக சிபிஎஸ்இ ஒப்புக்கொள்ளவில்லை என் றாலும், மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தேர்வுக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் 12 ஆம் வகுப் புக்குரிய பொருளாதாரப் பாட கேள்வித்தாள் வெளியானதாக மாணவர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டது. ஆனால், கேள்வித்தாள் கசியவில்லை என்று சிபிஎஸ்இ மறுத்துவந்தது. தேர்வு தொடங்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் பாக சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப்பில் கேள்வித்தாள் கசிந்ததாக கூறப்படுகிறது. கேள் வித்தாள் கசிந்ததை மறுத்த சிபிஎஸ்இ தரப்பு மாணவர், பெற்றோரை கவலைப்பட வேண்டாம் என்று கூறியது.

டில்லி அரசு விசாரணை

கடந்த15.3.2018அன்று சிபிஎஸ்இ12 ஆம் வகுப்பு கணக்கியல் தாள் வினாத் தாள் வெளியானதாகபுகார் கள் வந்ததாக டில்லி அரசு குறிப்பிட்டதுடன் விசார ணைக்கும் உத்தரவிட்டது. அப்போதும் சிபிஎஸ்இ நிர் வாகம் கேள்வித்தாள் கசிந்ததை மறுத்தது.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10ஆம்வகுப்பில்16லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினார் கள். தற்பொழுது சிபிஎஸ்இ ஒரு வாரத்துக்குள் மறு தேர்வுக்குரிய தேதியை அறிவிப்பதாகக் கூறி யுள்ளது.

4 பேர் கைது

டில்லி வடக்கு காவல்துறை டிசிபி ஜாதின் நர்வால் கூறிய தாவது: எஸ்எஸ்சி தேர்வு தாள் கசிந்தது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.51 இலட்சத்து 83 ஆயிரத்து 700 தொகை, 3 மடிக்கணினிகள், 10 செல்பேசிகள், கணினி  நினைவகங்கள் பென் டிரைவ் கள், ஹார்ட் டிஸ்க்குகள்  உள்ளிட்டவை பறிமுதல் செய் யப்பட்டன என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner