எழுத்துரு அளவு Larger Font Smaller Font


செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தஞ்சை, மார்ச் 30 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்த தமிழகத்தில் இப்பொழுது தேவை ஒருமித்த உணர்வு - ஒருமித்த குரல் -

ஒருமித்த போராட்டம் என்று செய்தியாளர் களிடம் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (30.3.2018) தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது:

செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில், தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி...?

தமிழர் தலைவர்: கடப்பாரையை விழுங்கி விட்டு சுக்கு கஷாயத்தை குடிக்கக்கூடாது.

செய்தியாளர்: இன்று நடைபெற்ற தி.மு.க. செயற்குழுவில் தமிழகத் திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட் டம் நடத்துவோம் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அப்படி ஒற்றுமையாக நடத்தும்போது, தமிழக அரசு தனிப் பாதையில் செல்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து நடத்தும் அந்தப் போராட்டத்தில் தமிழக அரசு வேற்றுமை காட்டாமல் அதில் கலந்துகொள்ளவேண்டும். அப்படி வேற்றுமை காட்டினால், அது எதிரிகளுக்குச் சாதகமாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் வேண்டும் என்கிற தமிழகத்தின் குரலை வெடி வைத்துத் தகர்ப்பதாகவும் அமையும். இப்பொழுது தேவை ஒருமித்த உணர்வு - ஒருமித்த குரல் - ஒருமித்த போராட்டம்.

செய்தியாளர்: தற்கொலை செய்துகொள்வோம் என்று அறிவிக் கிறார்களே தவிர, ராஜினாமா செய்யமாட்டேன் என்கிறார்களே, ஏன்?

தமிழர் தலைவர்: உங்களுடைய கேள்வியை, அப்படியே அவர் களுக்கு வைக்கிறேன்.

செய்தியாளர்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவையான ஒன்றா?

தமிழர் தலைவர்: அது ஒரு கட்டம்; அது தேவையும்கூட. ஆனால், அந்தக் கட்டமே போதாது.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner