எழுத்துரு அளவு Larger Font Smaller Fontகொல்கத்தா, மார்ச் 30 மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தின்போது மூண்ட வன்முறைக்குப் பிறகு, பதற்றம் நிலவும் இடங்களுக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை காவல்துறையினர் வியாழக்கிழமை தடுத்து நிறுத் தினர்.

அமைச்சருக்கு எதிராக 2 வழக்குகள்பதிவு செய்யப் பட் டுள்ளன. மேற்கு வங்க மாநிலம், ராணிகஞ்ச், வர்த்மான் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நடைபெற்றராமநவமிஊர் வலத்தின்போது வன்முறை மூண்டது. இதில், ஒருவர் கொல் லப்பட்டார். 2 காவல்துறையினர் காயமடைந்தனர். அதை யடுத்து, பதற்றமான பகுதி களில்144தடையுத்தரவுபிறப் பிக்கப்பட்டது. இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. ராணிகஞ்ச் பகுதியில் புதன்கிழமை இரவில் இருந்து எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை; நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்நிலையில், மத்திய கனரகத் தொழில் துறை இணையமைச்சரும்,அசான் சோல் மக்களவைத் தொகுதி உறுப்பினருமானபாபுல்சுப் ரியோ, வர்த்மான் மாவட்டங் களில் தனது தொகுதிக்கு உள்பட்ட ரயில்பூர் பகுதிக்கு வியாழக்கிழமைசெல்லமுயன் றார். அப்போது, பாதுகாப்புக் காரணங்களைச்சுட்டிக்காட்டி, அவரது காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அங்கு திரண்டிருந்த மக்கள், அமைச் சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner