எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மார்ச் 31 கருநாடக மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 20 லட்சம் இசுலாமியர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை தனியார் தொண்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.  கருநாடகத் தேர்தலில் காங்கிரசு வெற்றி

கருநாடக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பான பல நிகழ்வுகள் நிகழ்ந்துவருகின்றன. கரு நாடகாவில் மீண்டும் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமையும் என்ற கருத்துக் கணிப்பு வந்தது முதல் பாஜகவிற்கு மிகவும் அதிர்ச்சிகரமான பல நிகழ்வுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. முக்கியமாக பரம எதிரியாக இருந்த தேவகவுடாவின் ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில், மீண்டும் காங்கிரசு முழு பலத்துடன் ஆட்சி அமைக்கத் தயாராகி வருகிறது.

இதை முறியடிக்க பல தந்திர உத்திகளை பாஜக கையாண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக இசுலாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மையினரை வாக்குச் சாவடிக்கே செல்லவிடாமல் தடுக்கும் தந்திரத்தைத் துவங்கியுள்ளது, இந்த முறையை அசாமிலும் கடைபிடித்து அங்கு இசுலாமியர்களின் வாக்குகளை பதிவு செய்யாமல் முறியடித்து விட்டது. இதனால் காங்கிரசு தோல்வி அடைந்தது,  தற்போது கருநாடகத்திலும் அதே முறையைப் பயன்படுத்தத் துவங்கி யுள்ளது பா.ஜ.க.  இதன் முதல் படியாக சுமார் -20 லட்சம் இசுலாமியர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றி யுள்ளது. கருநாடக சட்டசபைத் தேர்தலில் 2 கோடியே 51 லட்சத்து 79 ஆயிரத்து 219 ஆண்களும், 2 கோடியே 44 லட்சத்து 72 ஆயிரத்து 288 பெண்களும் ஓட்டுப் போட தகுதியானவர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினமாக 4,552 பேர் ஓட்டுப் போட தகுதி படைத்தவர்கள். கருநாடகத்தில் ஒட்டு மொத்தமாக 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 59 பேர் ஓட்டுப் போட தகுதியானவர்கள் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின்போது தெரிவித்தார். புதியதாக 15 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப் பட்டு இருப்பதாகவும் அவர் குறிப் பிட்டிருந்தார்.

1.28 லட்சம் முசுலிம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்

டில்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று புதிய வாக்காளர் பட்டியலின் மீது மேற்கொண்ட ஆய்வில், 20 லட்சம் இசுலாமிய வாக்காளர்களின் பெயர் விடுபட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. வளர்ச் சிக் கொள்கைகள் மீதான ஆராய்ச்சி மற்றும் விவாத மய்யம்'' என்கிற அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி காலித் ஷாயிஃபுல்லா தெரிவிக்கையில், மொத்தம் 16 தொகுதிகளில் நடத் தப்பட்ட ஆய்வில் 1.28 லட்சம் முசுலிம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருக்கின்றன. இதைக்கொண்டு கணக் கிடுகையில், 224 தொகுதிகளிலும் 20 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரை விடுபட்டு இருக்கலாம்'' என்று தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும், 2018ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித் துள்ளார். தேர்தல் ஆணைய கணக்கின் படி பெங்களூரு சிவாஜிநகர் தொகுதியில், உள்ள 8,900 குடும்பங்களில் ஒருவர் மட்டுமே வாக்காளர் பெயர் பட்டியலில் பெயரை இணைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதே தொகுதியில் கடந்த 2013- ஆம் ஆண்டு 6000 இசுலாமிய வாக்காளர்கள் இருந்த நிலையில் அத்தனைப் பெயர்களும் எப்படி நீக்கப்பட்டன என்பது புதிராகவே உள்ளது.  இந்நிலையில், அந்த தொண்டு நிறுவனம் சார்பில், இணையதளமும், அலைபேசி செயலியும் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டு இருக்கும் இசுலாமியர்கள் உடனடியாக கண்டறிந்து தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும், இசுலாமியர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை இணைக்க வேண்டும் என்று அந்தத் தொண்டு நிறுவனமும் பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறது. மாநிலத்தில் காங்கிரசு ஆட்சி நடந்து கொண்டு இருக்கும்போதே மறை முகமாக இசுலாமியர் வாக்காளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் மேற்குப் பகுதி மாவட்டங்களில் பிற மாநிலத்தவர்களுக்கு அதிக அளவு வாக்களர் அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் கருநாடக தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பாஜகவின் தகவல் தொடர்பு பிரிவு தேர்தல் தேதியை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் தேர்தல் ஆணையமும் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையே இது காட்டுகிறது. அதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தற்போது மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான இசுலாமிய வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கருநாடகாவில், வடமேற்கு மாவட் டம், பெங்களூரு உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களில் இசுலாமியர்களின் வாக்குகள் அதிகம் உள்ளன. இதுவரை இசுலாமியர்கள் வாழும் பகுதியில் காங்கிரசுக்கு முழுமையாக ஆதரவைத் தெரிவித்து வாக்களித்து வந்தனர். இந்த முறை இவர்களை வாக்குகளைப் பதிவு செய்யவிடாமல் தடுக்கும் தந்திரம் ஆரம்பத்திலேயே அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner