எழுத்துரு அளவு Larger Font Smaller Font

>> பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு. (புதிய புதிய கிரகங்களைக் கண்டுபிடித்து வருகிறார்களே - இன்னும் ஜோதிட சிகாமணிகள் நவ (ஒன்பது) கிரகத்துக் குள்ளேயே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்களே!)

>> டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம். (மயிலே மயிலே என்றால் மத்திய அரசு இறகு போடாது).

>> இந்திய அரசியலில் திமுக தனித்துவத்துடன் திகழும் - டி.ஆர். பாலு (இனவுணர்வு, மொழி உணர்வு, சமூகநீதி உணர்வு, பகுத்தறிவு உணர்வு - இவைதான் அந்தத் தனித் தன்மை!)

>> மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. (அம்பேத்கர் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண் டாடப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளாரே அது போதாதா?)

>> காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே நியாயமான தீர்வாகும். - நடிகர் ரஜினிகாந்த் (வாயைத் திறந்து விட்டார் - பலே, பலே!)

>> பழனி முருகன் சிலை முறைகேடு - அய்.ஜி. பொன். மாணிக்க வேல் விசாரணை. (பழனி முருகனைவிட பொன்.மாணிக்கவேல் பலசாலி).

>> கோவில் யானைகளுக்கு வாரம் தோறும் பரிசோதனை. (ஏன், யானை முகத்தான் விநாயகன் காப்பாற்ற மாட்டானோ!)

>> லேகியம் சாப்பிட்டதால் வாலிபர் பலி. (கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கைது எப்போது?)

>> காவிரி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தமிழக முதல் அமைச்சர் முடிவு. (நம்பினார் கெடுவதில்லை - இது பழைய மொழி - பிரதமர் மோடியை நம்பினார் கெடுவார் என்பது புதுமொழி).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner