எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரியில் மத்திய அரசின் கபட நாடகம் அம்பலமானது 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடில்லி, மார்ச் 31  காவிரி இறுதித் தீர்ப்பில்  குறிப்பிட் டுள்ள 'ஸ்கீம்' என்ற வார்த் தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி நீரை 4 மாநிலங்கள் பங்கிட்டுக் கொள்வது தொடர் பாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக் கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரி யத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்தது.ஆனால் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை பயன்படுத் தாமல் 'ஸ்கீம்' என்றே நீதி பதிகள் குறிப்பிட்டுள்ளனர். 'ஸ்கீம்' என்றால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி அது காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழக அரசு சொல்லி வருகிறது. ஆனால் மத்திய அரசும், கருநாடக அரசும் 'ஸ்கீம்' என்றால் ஒரு அமைப்பு தான் என்று சொல்லி வருகின் றன. உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்பதால் மத்திய அரசு மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடிவு செய் துள்ளன. இந்நிலையில் தங் களுக்கு எதிராக நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடரப்படு வதற்கு முன்னர் மத்திய அரசு முந்திக்கொண்டு 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக் கல் செய்துள்ளது.

அதில் 'ஸ்கீம்' என்றால் என்ன என்று விளக்கம் கேட் டுள்ளது. மேலும் தீர்ப்பை அமல்படுத்த  3 மாதம் அவ காசம் கேட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தமிழக அரசு மனு தாக்கல்

இன்று (31.3.2018) தமிழக அரசு மனு ஒன்றை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய் துள்ளது. தமி ழக அரசு தாக்கல் செய்த மனுவில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதம் செய் வதால் காவிரி டெல்டா பாசன பகுதியில் கடும் பாதிப்பு ஏற் பட்டுள்ளது என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தாமல் இருப்பது நீதி மன்ற அவமதிப்புக்குரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர இந்த ஆண்டு காவிரியில் இருந்து கருநாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டிய அளவு நிலுவை குறித்தும் மனுவில் குறிப்பிட் டுள்ளதாக தெரிகிறது. 

உ.பி. பாஜக அரசுக்கு அம்பேத்கர் பேரன்கள் கண்டனம்!

மும்பை, மார்ச் 31 அம்பேத்கர் பெயரை ராம்ஜி என்ற வார்த்தையைச் சேர்த்தே எழுத வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு, அம்பேத்கரின் பேரன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner