எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.1 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சியான திமுக சார்பில், அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.4.2018) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி பிரச்சி னையில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், சி.பி.அய்., சி.பி.எம்., இ.யூ.முசுலிம் லீக், காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டு மற்றும் திராவிடர் கழகம் உள் ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், ஏப்ரல் 5 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கு ஆதரவு அளிக்குமாறு வணிக சங்க பேரமைப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அனைத்துக்கட்சி தலைவர் கள் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். மேலும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும் போது கறுப்புக்கொடி காட்ட முடிவு எடுத்துள்ளோம் என்றார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத் துக் கட்சி போராட்டம் சென்னை வள்ளுவர் கோட் டத்தில் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பின்போது ரயில், பேருந்துகளை மறித்து போராட்டம் நடைபெறும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை எங்களைக் கைது செய்தாலும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.    இதையடுத்து அங்கு வந்த காவல் துறை போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர், முத்தரசன்,  உதயநிதி உள்ளிட்டோரை கைது செய்தனர். அப்போது திமுக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner