எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஏப்ரல் 3 ஆம் தேதி நீட்டை எதிர்த்து  நாடாளுமன்றம்முன் ஆர்ப்பாட்டம்! சமூகநீதிக் கருத்தரங்கம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., - து.ராஜா எம்.பி., - டி.கே.ரெங்கராஜன் எம்.பி., - தொல்.திருமாவளவன் - பேரா.ஜவாஹிருல்லா மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

சென்னையிலிருந்து 90 போராட்ட வீரர்கள் புறப்பட்டனர்

 

புதுடில்லி, ஏப்.2 நீட்'  தேர்வை ரத்து செய்யக் கோருதல், மருத்துவ உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தல் உள்ளிட்ட சமூகநீதிக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (3.4.2018) டில்லியில் காலை 10 மணிக்கு நாடாளுமன்றம்முன் ஆர்ப்பாட்டமும், பிற்பகல் 3 மணிக்கு கான்ஸ்டியூஷன் கிளப்பில் சமூகநீதிக் கருத்தரங்கமும் நடைபெற உள்ளன. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்..

தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு அமைப்புகளின் மாண வர்கள் பங்கேற்கின்றனர்.  நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாள்: 03.04.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி

இடம்:ஜந்தர் மந்தர், நாடாளுமன்றச் சாலை, புதுடில்லி

தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர்கள், அனைத்திந்திய அளவிலான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், மாணவர்கள், சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவையைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளின் பிரதி நிதிகள் பங்கேற்கிறார்கள்.

சமூகநீதிக் கருத்தரங்கம்

நாள்: 03.04.2018 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி

இடம்: அவைத் தலைவர் அரங்கம், கான்ஸ்டிடியூசன் கிளப், நாடாளுமன்றம் அருகில், புதுடில்லி

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டுக் கொண்டு வருதல்

மருத்துவ உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறை களிலும் இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துதல்

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு

மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு

பங்கேற்பாளர்கள்

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு:

ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழகம்)

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

பெ.விசுவநாதன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரசு)

தோழர் து.ராஜா (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

தோழர் டி.கே.ரெங்கராஜன் (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-, மார்க்சிஸ்ட்)

குர்ரம் அனீஸ் உமர் (தேசிய செயலாளர், இந்திய யூனியன் முசுலிம் லீக்)

பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா (தலைவர், மனித நேய மக்கள் கட்சி)

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

மு.தமிமுன் அன்சாரி (சட்டப் பேரவை உறுப்பினர், பொதுச் செய லாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி)

கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி (மாநில தலைவர், எஸ்.டி.பி.அய்.)

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்: கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா, வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி.

அகில இந்திய அமைப்புகள்

பேராசிரியர் அனில் சட்கோபால் (கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தலைமைக் குழு உறுப் பினர் கிமிதிஸிஜிணி)

தோழர் விசுவஜித் குமார் (பொதுச்செயலாளர், அனைத் திந்திய மாணவர் பெருமன்றம்)

அகில இந்திய மாணவர் போராட்டக் கவுன்சில் (கிமிசிஷிஷி) பிரதிநிதிகள்,

மருத்துவர் அமைப்புகள்

டாக்டர் ஜி.ரவீந்திரநாத் (பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்)

டாக்டர் நந்தகுமார் (கூடுதல் செயலாளர், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம்)

சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை

சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டப் பேரவை உறுப்பினர், மாநில செயலாளர், திராவிட முன்னேற்றக் கழக மாண வரணி)

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தி.ஆ.நவீன் (பொறுப்பாளர், தமிழ்நாடு மாணவர் காங்கிரசு)

வழக்குரைஞர் செஞ்சுடர் (மாநில துணைச் செயலாளர், முற்போக்கு மாணவர் கழகம்)

புளியங்குடி எம்.முகமது அல்அமீன் (தேசிய இணைச் செயலாளர், முசுலிம் மாணவர் பேரவை)

நூருதீன் (மாநில செயலாளர், சமூகநீதி மாணவர் இயக்கம்)

எஸ்.முஸ்தபா (மாநில தலைவர், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா)

முகம்மது அசாருதீன் (மாநில செய லாளர், மாணவர் இந்தியா)

இளையராஜா (தலைவர், தமிழ்நாடு மாணவர் முன் னணி)

சிறீநாத் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாண வரணி)

கா.அமுதரசன் (அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம்)

மற்றும் மாணவர் அமைப்புகள், சிறுபான்மை இயக் கங்கள், கல்வியாளர் குழுக்களின் பிரதிநிதிகள்.

ஏற்பாடு: ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்ட மைப்பு, சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை.

90 பேர் புறப்பட்டனர்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி.எக்ஸ்பிரஸ் மூலம் 90 போராட்ட வீரர்கள் நேற்று (1.4.2018) டில்லிக்குப் புறப்பட்டனர். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பங் கேற்கிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner