எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஏப்.2 பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் அய்க்கிய ஜனதா தளம்- பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபேயின் மகன் அர்ஜித் சஷ்வத் தலை மையில் கடந்த 17- ஆம் தேதி பாகல்பூரில் ராம நவமி ஊர்வலம் நடந்தது. காவல்துறையினரின் அனுமதி பெறாமல் நடந்த ஊர்வலத்தின்போதுசிலஇடங் களில் வகுப்பு கலவரம் ஏற்பட் டது.

இது தொடர்பாக பாகல் பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி அர்ஜித் சஷ்வத் உள்பட 8 பேர்மீது வழக்குப் பதிவு செய்து இருந்தனர்.

காவல்துறையினர் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் பாகல்பூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்து கடந்த 24 ஆம் தேதி கைது ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த வகுப்பு கலவரம் தொடர்பாக அர்ஜித் சஷ்வத்தை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். பாட் னாவில் உள்ள அனுமான் கோவிலில் இருந்தபோது காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner