எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஏப்.2 தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரு கிறது. அதன் ஒரு கட்டமாக நன்னடத்தையுள்ள சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி முன்னதாகவே விடு தலை செய்வதென தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் அம்முடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய தமிழக ஆளுநர் தற்பொழுது அதற்கு முட்டுக்கட்டை போடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி, நன்னடத்தை உள்ளசிறைக்கைதிகளில்ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு களுக்குமேல்சிறையில்இருப்ப வர்கள்,ஆயுள்தண்டனைக் கைதிகளில் 60 வயதைக்கடந்தவர் கள் 5ஆண்டுகளுக்கு மேல் சிறையில்இருப்பவர்கள்ஆகி யோரை விடுதலை செய்வ தென்று25.2.2018அன்று தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று (1.4.2018) தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் அவசரஆலோசனைக்கூட்டத் தைக் கூட்டினார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை ஏடிஜிபி (சிறைத்துறை) அஷூ தோஷ் சுக்லா, தமிழக அரசு வழக்குரைஞர் விஜய் நாராயண் மற்றும் பிற அலுவலர்களுடன் ஆளுநர் மாளிகையில்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோ சனை செய்தார். அப்போது, தமிழக அரசால் பொது மன் னிப்பின்கீழ்விடுதலைசெய் யப்படும் ஒவ்வொரு கைதி குறித்தும் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

செய்தியும் - சிந்தனையும்!

இதில் என்ன பரவசம்?

செய்தி: பறவைக் காவடிகளுடன் பழநியில் பரசவம்.

சிந்தனை: பழநி முருகனையே சுரண்டியாச்சு - இதில் என்ன பரவசம் வேண்டிக் கிடக்கு?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner