எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி நதிநீர் உரிமை மீட்புக்காக தமிழகமே ஒன்றுபட்டு நிற்கிறது என்பதற்கு அடையாளமாக 5 ஆம் தேதி முழு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவீர்!

அறவழியாக நடக்கட்டும் - ஆட்சியாளர் கண்களும் திறக்கட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அதிமுக்கிய அறிக்கை

திருவெறும்பூர் உஷா சாவு; சென்னையில் அஸ்வினி படுகொலை; மலையேறச் சென்ற இருபால் இளைஞர்கள் பரிதாப மரணம்!  இனி இவை நடைபெறாமல் இருக்க அரசும் - சமூக ஆர்வலர்களும் இணைந்து செயல்படவேண்டும்

காவிரி நதிநீர் உரிமை மீட்புக்காக வரும் 5 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்தப் படவிருக்கும் முழு வேலை நிறுத்தத்தை வெற்றி கரமாக்கிக் காட்டவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

உலகின்பலநாடுகளுக்கிடையிலானநதிநீர்ப்பிரச் சினைகள் எளிதாகத் தீர்க்கப்பட்டுவிட முடியும். பரமஎதிரிகளாகஇருந்துவரும்இந்தியாவுக்கும்- பாகிஸ் தானுக்குமிடையிலான சிந்துநதிப் பிரச்சினை, இந்தியாவுக்கும் - பங்களாதேசத்திற்குமிடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துக் கொள்ள முடியும்.

தீர்வு காண முடியாமைக்குக் காரணம் என்ன?

இந்தியத் தேசியம் பேசும் இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டும் அதிலும் குறிப்பாக காவிரி நீர்ப் பிரச்சினை மட்டும் தீர்வு காண முடியாததாக இருக்கிறது என்றால், இதன் பொருள் என்ன?

சட்டம், ஒப்பந்தம், நியாயம், நீதி இவை எல்லாம் அரசியல் சுயலாபம் என்பதற்கு முன்னர் காணாமல் போய்விடுகின்றனவே!

தமிழ்நாடு வடிகால் நிலப் பகுதியா?

காவிரி கருநாடகத்தில் உற்பத்தியாகிறது என்பதற்காக மட்டும், தானடித்த மூப்பாக கருநாடகம் நடந்துகொள்ள முடியுமா? முடியாது என்பதுதான் சட்டத்தின் நிலை. ஆனால், நடப்பது என்ன? தமிழ்நாட்டை வடிகாலாகப் பயன்படுத்துவது மட்டும்தான் கருநாடகம் பின்பற்றிவரும் அழும்பும் - அக்கிரமமும் ஆகும்.

இந்தியாவில் சட்ட ஆட்சி நொறுங்குகிறதா?

நடுவர்மன்றம்சொன்னால்என்ன?ஏன்உச்சநீதி மன்றமும் தான் கட்டளையிட்டால் என்ன? அவற்றை யெல்லாம் பொருட்படுத்தப் போவதில்லை என்பதில் கருநாடகமும், மத்திய அரசும் உறுதியாகவே இருக்கின்றன.

இதன்மூலம் சட்ட ஆட்சி என்பதே இந்தியாவில் நொறுங்கிப் போய்விட்டதா, இல்லையா? கடந்த ஞாயிறு அன்று தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில், இது மிக முக்கியமாக அடிகோடிட்டுச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாநிலங்களின் உரிமை என்னாயிற்று?

மாநிலங்களின் ஒருங்கிணைப்புதான் இந்தியா என்பதை இந்திய தேசியமும், மத்திய ஆட்சியும், நீதிமன் றங்களும் கேள்விக்குறியாக்கி விட்டனவே!

தமிழ்நாடு பாலைவனமாவதற்கு எல்லா ஏற்பாடுகளும் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. எங்களைக் கால் பதிக்க இடம் கொடுங்கள் - உங்களுக்குக் காவிரி நீரைத் தருகிறோம்' என்று தமிழ்நாட்டை நோக்கி இந்துத்துவா பி.ஜே.பி. ஆட்சி சொல்லாமல் சொல்லிக் கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் - ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என் றும், மேல்முறையீடுகள் இதில் கிடையாது என்றும், திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஸ்கீம்' என்ற சொல்லை வைத்துக்கொண்டு வார்த்தை விளையாட்டில் மத்திய பி.ஜே.பி. அரசும், கருநாடக மாநில அரசும் ஈடுபடுவது சிறுபிள்ளைத்தனம் அல்லவா?

உச்சநீதிமன்றத்தில் ஸ்கீம்' என்றால் என்னவென்று கேட்டால், வெண்டைக்காய், விளக்கெண்ணெய் விளக்கம் அளிப்பது பொறுப்புள்ளமை தானா?

அரசுகளை, நீதிமன்றங்களை நம்பிப் பயனில்லை

தமிழகம் இனி அரசுகளை நம்பிப் பயனில்லை; நீதிமன்றங்களை நம்பியும் பயனில்லை. வீதிமன்றங்கள்தான் இதற்கு விடையளிக்கும் என்ற அடிப்படையில்தான் கடந்த ஞாயிறன்று (1.4.2018) சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று முக்கிய போராட்டத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மூன்று முக்கிய முடிவுகள்

1. நாளை மறுநாள் (5.4.2018) வியாழனன்று தமிழகம் தழுவிய அளவில் முழு வேலை நிறுத்தம்.

2. தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமருக்குக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.

3. ஆளுநர் மாளிகை நோக்கி உரிமை மீட்புப் பயணம்

ஜனநாயக நெறிமுறைப்படி இம்மூன்று திட்டங்களும் தீர்க்கமான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கட்சியில்லை, வேறு பிரச்சினைகள் ஏதுமில்லை. ஒரே பிரச்சினை - தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் உரிமையைப் பெறுவதே!

வரவேற்கத்தக்க அறிவிப்புகள்

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாத பா.ம.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற கட்சிகள் கூட 5 ஆம் தேதி முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது வர வேற்கத்தக்கது. வணிகர் சங்கங்களும் முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரயில், பேருந்துகள் ஓடக்கூடாது!

அன்றைய தினம் ரயில், பேருந்துகள் ஓடக்கூடாது -  வணிக நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் இயங்காமல் தமிழ்நாடே வெறிச்சோடி கிடக்கவேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான உன்னத உணர்வு எத்தகையது என்பது தெரியவேண்டியவர்களுக்குத் தெரி விக்கப்படட்டும்!

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள்;

தமிழ்நாடு கிள்ளுக்கீரையா?

நதிநீர்ப் பிரச்சினை என்றாலும், நீட்' என்றாலும், நியூட்ரினோ உள்ளிட்ட பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் நீரோக் களுக்குத் தக்கதோர் எச்சரிக்கை அறிவிப்புப் பலகையாக - பதாகையாக 5 ஆம் தேதி முழு வேலை நிறுத்தம், தன் முழு உருவத்தை வெளிப்படுத்திக் காட்டட்டும்!

அறவழியில் மட்டுமே அமையட்டும்!

பொது அமைதிக்குக் குந்தகம் இல்லாமல் பொதுச் சொத்துக்கோ, பொதுமக்களுக்கோ பிரச்சினை ஏற் படாமல் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்துவோம்! வெளிப்படுத்துவோம்!! சில அசவுகரியங்கள் ஏற்படலாம். உரிமை மீட்பு என்பது உயிரினும் மேலானதாயிற்றே! அதன்முன் சிறு அசவுகரி யங்களைப் பொறுத்துக் கொள்வோம். எந்த உரிமையைப் பெறுவதாக இருந்தாலும் அதற்குரிய விலையைக் கட்டாயம் கொடுக்கவேண்டும்; இனாமாகப் பெறக்கூடாது என்பார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.

ஒன்றாய் எழுந்து நிற்போம்!

ஓரணியாய்க் குரல் கொடுப்போம்!

நமது உயிரினும் மேலான உரிமையை மீட்டெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புக் கொடுக்குமாறு கனிவுடன், உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.

 

புதுடில்லி 
3.4.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner