எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி

அரியலூரிலிருந்து பயணம்....

தி.மு.க. தலைமை நிலையம் முக்கிய அறிவிப்பு

சென்னை, ஏப்.7 கடந்த 1-.4.-2018 அன்று நடை பெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, டெல்டா பகுதிகளில் காவிரி மீட்புப் பயணம் குறித்து கலந்தாலோசித்து, டெல்டா பகுதி முழுவதும் காவிரி மீட்புப் பயணத்தை நடத்திடும் வகையில், இரு குழுக்களாகப் பிரிந்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென நேற்று (6.-4.-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத் துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்,  ஒருமனதாக முடிவு செய்ததின் அடிப்படையில்,  இன்று (7.-4-.2018) திருச்சி மாவட்டம், முக்கொம்பில் இருந்து ஒரு பயணம் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, வரும் 9.-4.-2018  அன்று அரியலூர் மாவட்டத்திலிருந்து ஒரு குழுவின் பயணம் தொடங்கவிருக்கிறது.எனவே, இன்று (7.4.2018) மற்றும் 9.4.2018 ஆகிய நாள்களில் இரு பிரிவுகளாகத் தொடங் கும் காவிரி மீட்புப் பயணத்தை, திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர்  அய்யா கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

இதில் 9-.4-.2018 அன்று அரியலூர் மாவட் டத்திலிருந்து தொடங்க உள்ள காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., வி.பி.துரைசாமி, தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இக்காவிரி உரிமை மீட்புப் பய ணத்தில், அனைத்து கட்சிகளின் தலைவர்கள், அந்தந்த கட்சிகளின் முன்னோடிகள், மாவட்ட,  ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சிக் கழக நிர்வாகிகள் மற்றும்  தி.மு.க. தோழர்கள், அனைத்துக் கட்சியினர் பெருந்திரளாக பங் கேற்கிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner