எழுத்துரு அளவு Larger Font Smaller Font

>> புதிய இந்தியா என்பது அறிவியல் பூர்வமானதாகவும், தொழில்நுட்பத்தில் சிறந்ததாகவும் இருக்கவேண்டும் - வெங்கையா நாயுடு, துணைக் குடியரசுத் தலைவர்

(பி.ஜே.பி. அமைக்கவிருக்கும் ராமராஜ்ஜியம் என்பது இதுதானோ!).

>> மனைவி வெறும் ஒரு பொருள்'' அல்ல - உச்சநீதிமன்றம்

(பொருள்'' பொதிந்த வாசகம்!).

>> சிரியாவில் நடந்த இராசாயன தாக்குதலில் 40 பேர் பலி.  (இயந்திரத்துக்குத்தான் இரக்கம் இல்லை. அதனை உருவாக்கி, செயல்படுத்துகிறவர்கள் மனிதர்கள்தானே - எங்கே போனது மனிதநேயம்?).

>> சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை வாரியத்தின் இரு வினாத்தாள்கள் வெளியானது மாபியா வேலை - ஆறு பேர் கைது!

(சைத்தான் வேலை என்று சொல்லித் தப்பிக்க வேண்டியதுதானே!).

>> தலைநகர் டில்லியில் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் அனுஜ் சவுத்ரியின் வீட்டிற்குள் புகுந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

(தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ்.... இந்த வரிசை இந்துத்துவா' ஆட்சியில் தொடர்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?).

>> தி.மு.க.வுக்குப் போட்டியாக தே.மு.தி.க. போராட்டம் - தினமலர்' செய்தி.

(இவர்களுக்கு எதிரி கருநாடகம் அல்ல - தி.மு.க.தானா?).

>> மகாத்மா காந்தி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

(ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் துணிந்து விண்ணப்பிக்கலாம்; காந்தியார் கொலையின் மூளையாக இருந்தவரான சாவர்க்கர் படம் நாடாளுமன்றத்தில் மின்னிக் கொண்டுள்ளதே - பிறகு என்ன?).

>> சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்குச் செல்லும் ரசிகர்களின் வசதிக்காக சென்னைக் கடற்கரை - வேளச்சேரி இடையே கிரிக்கெட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

(எதிர்ப்பாளர்களின் குறி - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மட்டுமல்ல - மின்சார இரயில்களுமா?)

>> அய்.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை. (கிரிக்கெட் விளையாட்டுக் காரர்கள், ஏலம் எடுப்பவர்கள் எல்லாம் சூதாட்டத்தில் ஈடுபடும்போது, கள்ள டிக்கெட் விற்பனை ஒரு அற்பம்!')

>> துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசின் பங்களிப்பு வேண்டும் - அமைச்சர் க.பாண்டியராஜன் (தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக் கழகத்துக்கு ஒரு கேரளப் பெண்மணியை துணைவேந்தராக நியமித்தபோது, இதே அமைச்சர் எப்படியெல்லாம் வக்காலத்து வாங்கினார்?)

>> மதம் மனங்களை இணைக்கும் பாலம்! - தினமணி' சிறப்புக் கட்டுரை (அந்தப் பாலத்தை நாள்தோறும் இடிப்பவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் தினமணி'யா இப்படி எழுதுவது?)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner