எழுத்துரு அளவு Larger Font Smaller Font

>>பாதுகாப்புத் துறை இணையதளம் முடக்கப்பட்டது

>>சிபிஅய் இணையதளம் முடக்கப்பட்டது

>>ஓ என் ஜி சி இணையதளம் முடக்கப்பட்டது

>>மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக இணையதளம் முடக்கப்பட்டது இப்படி பல மிகவும் முக்கிய மான இணையதளங்கள் முடக்கப் பட்டு, அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.  இந்த நிலையில், நீட்' தேர்வு முடிவுகள் அனைத்தும் இணையதளங்கள் வழியாகத்தான் திருத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஏற் கெனவே அமெரிக்காவைச் சேர்ந்த புரேமெட்ரின் இணையதள நிறுவனம் (இதுதான் நீட் தேர்வை திருத்தும் பணியை மேற் கொண்டுள்ளது) பணம் கொடுத்தவர்களைத் தேர்ச்சி பெற வைக்கிறது என்ற குற்றச்சாட்டை அமித்ராய் என்பவர் ஆதாரத் துடன் விளக்கியிருந்தார்.  சில அரசியல்வாதிகளும் அமெரிக்காவின் இணையதள அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த நிலையில் இணையதளங்கள் முடக்கப்பட்டு வருவதால் நீட்' தேர்வு நேர்மையாக நடக்குமா? என்ற அய்யம்  எழுந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner