எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவுள் சக்தியைப் பாரீர்!

கோவிலுக்குச் சென்றபோது விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சிந்த்வாரா, ஏப்.11 மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் சியோனி சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஸ்கூட்டரில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப் போது அந்த வழியாக வந்த லாரி, ஸ்கூட்டர்மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்ற கோலு (35), அவரது மனைவி தீபிகா (30), மகள் ரானு (8), தீபி காவின் தாய் காகீ பாய் (45) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்தில் இருந்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து குந்திபுரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

 கோவிலில் நகை-பணம் கொள்ளை

 

போச்சம்பள்ளி, ஏப்.11 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த காவேரியூர் பகுதியில் சுமார் 150- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன.

இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சார்பில் மேலூர் சக்தி மாரியம்மன் கோவிலை புதிதாக கட்டி உள்ளனர். அதற்கு கடந்த 5மாதங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றதாம்.

இந்தக் கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் தினமும் காலை மற்றும் மாலைஇரு வேளைகளில் அம்மன்சிலைக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்து விட்டு இரவு 7 மணிக்கு கோவிலை பூட்டி சாவியை எடுத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இரவு 7 மணிக்கு பூசாரி மாரியப்பன் கோவிலில் பூஜையை முடித்து பூட்டி விட்டுச் சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறப்பதற்காக வந் தார்.

அப்போது கோவிலின் முன்பகுதியில் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் ஊர் பொதுமக்களிடம் சென்று தகவல் தெரிவித்தார். தகவலறிந்த ஊர்பொது மக்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது, சிலர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உள்ளனர்.

பின்னர் அவர்கள் கோவிலி னுள் இருந்த பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சாரம் மற்றும் ரூ.45 ஆயிரம் பணத்தையும், பின்னர் கருவறையில் இருந்த அம்மன் சிலைக் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி செயினையும், கோவிலில் இருந்த பூஜைப் பொருட்கள், பேன், மைக்செட், ஸ்பீக்கர், சுமார் 5 அடி உயரமுள்ள 2 விளக்குகள் உள்பட 4 குத்து விளக்குகள் என மொத்தம் ரூ.4லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் பாரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner