எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நம் நாட்டில் எந்த விஷயத்தில் ஒரு பொது விதியைக் கொண்டுவர முயன்றாலும், அதில் சிக்கலில்லாமல் இருக்காது. இதனால் மோடி அரசு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்திய விதத்தையும், வேகத்தையும் நாம் ஏற்றுக்கொள்வதாக நினைக்கவேண்டாம்.

- துக்ளக்'கில் எஸ்.குருமூர்த்தி (11.4.2018)

(மோடி அரசை மேலே விழுந்து விழுந்து ஆதரிக்கும் குருமூர்த்தி அய்யராலேயே ஜி.எஸ்.டி.யை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது).

2014 இல் மோடி அலையின் வீச்சு குறைந்து இருக்கலாம். ஆனால், அவர்மீதான மக்களின் நம்பகத்தன்மை இன்னமும் நீடிக்கிறது. மக்கள் 2014 இல் அவர்மீது கொண்டிருந்த எதிர்ப்பார்ப்புகளில் சில நிறைவேறாமல் போயிருக்கலாம். எதிர்காலத்தில் அவை நிறைவுறுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்ற எண்ணம் இன்னமும் மக்களிடம் தொடர்கிறது.

- துக்ளக்'கில் அதன் ஆஸ்தான எழுத்தாளர் வசந்தன்பெருமாள்

ஆட்சியில் இருப்பவர்கள் போராட்டம் நடத்துவோம் என்றால், சட்டத்தை எங்களால் ஆட்சி செய்ய முடியவில்லை என்றுதானே அர்த்தம்?

- துக்ளக்', 18.4.2018

12.4.2018 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளாரே அதைத்தான் இப்படிச் சொல்லுகிறார் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா!)

எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடையும் என்று தெரிந்தே அதைக் கொண்டு வருவதில் தவறு இல்லை. ஏனென்றால், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்மூலம் ஆளும் கட்சியின் தவறுகளை எடுத்துக் கூற வாய்ப்பாகிறது.

- துக்ளக்', 18.4.2018

(துக்ளக்'கின் அண்மைக்கால எழுத்துகள் எல்லாம் மோடியின் மீதான நம்பிக்கை என்பதில் பலகீனம் தட்டுப்பட ஆரம்பித்துவிட்டது - சுருதி குறைய ஆரம்பித்துவிட்டது என்ப தற்கு இந்த எழுத்துகள் எல்லாம் சாட்சியங்கள்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner