எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.15  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோ தரர்களால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல் அமைச்சர் ஆதித்யாநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை காவல்துறை காவலின்போது மரண மடைந்தார். இந்த இரு சம்பவங் களும் நாடு முழுவதும் அதிர் வலை களை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொடுமைகளுக்கு மத்திய - மாநில அரசுகள் உரிய முறையில் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்த சம்பவங்களை கண்டித்து மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, வி.கே. சிங் ஆகியோர் கருத்து வெளியிட்டனர். இருப்பினும், பிரதமர் இவ் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கிடையில், டில்லியில் நேற்று (14.4.2018) மாலை நடை பெற்ற அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்புவிழாவில் பங் கேற்று உரையாற்றியபோது இது தொடர்பாக மவுனம் கலைத்த பிரத மர் மோடி, எந்த குற்றவாளியையும் தப்பவிட மாட்டோம், நமது மகள் களுக்கான நீதி நிச்சயமாக கிடைக் கும் என குறிப்பிட் டுள்ளார்.

கடந்த இருநாட்களாக விவாதத் துக்குள்ளாகி வரும் சம்பவங்கள் நாகரிகம் அடைந்த மனித சமுதாயத் தின் ஒரு பகுதியாக இருக்க முடி யாது. ஒரு நாடாகவும், ஒரு சமு தாயமாகவும், இதற்காக நாம் அனைவரும் வெட்கப்படுகிறோம். எந்த குற்ற வாளியையும் நாங்கள் விட்டு வைக்க மாட்டோம். முழுமையான நீதி நிலைநாட்டப் படும், நமது மகள்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும் என மோடி தெரிவித்தார். இந்நிலை யில், நமது மகள்களுக்கான நீதி எப்போது கிடைக்கும் பிரதமரே? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட் டுள்ள ராகுல் காந்தி, அன்புக் குரிய பிரதமர் அவர்களே! உங்களது நெடிய மவுனத்தை கலைத்தமைக்காக நன்றி! நமது மகள்களுக்கான நீதி கிடைக்கும் என்று தெரிவித் துள்ளீர்கள். அது எப்போது? என இந்த நாடு அறிந்து கொள்ள விரும் புகிறது. பதில் கூறுங்கள் என குறிப் பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner