எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, ஏப்.17 காவிரி விவகாரத்தில் கருநாடகாவுக்கு எந்த வகையிலும் பாஜக பாதிப்பை ஏற்படுத்தாது என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் நேற்று (16.4.2018) பெங்களூருவில் தெரிவித்தார்.   கருநாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே 12- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் பாஜக தனித்தோ அல்லது யார் முதுகிலாவது சவாரி செய்து கொண்டோ பெரும்பாலான மாநிலங் களில் ஆட்சி அமைக்கிறது. அந்த வகையில் கருநாடக தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதுபோல் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என காங்கிரசு கட்சி நினைக்கிறது.

இதனால் காங்கிரசு கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும், பாஜ கவின் அமித் ஷாவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் காவிரி விவகாரம் தமிழகம் மற்றும் கருநாடகாவுக்கு இடையே பெரும் பிரச்சினையாகியுள்ளது.

கருநாடக தேர்தலை மனதில் வைத் துக் கொண்டே காவிரி வாரியத்தை மத் திய அரசு அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவிரி வாரியம் அமைத்தே தீர வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்களோ காவிரி தமிழகத்தில் பாய்ந்தோடும் என்று வாய்ச்சவடால் விடுகின்றனர்.

காவிரி பிரச்சினை இழுத்தடிக்கப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலை யில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் பெங்களூரு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளன.

காவிரி விவகாரத்தில் பாஜகவின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கருநாடகவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது. இதுகுறித்து கருநாடக தேர்தல் அறிக் கையிலும் வெளியிடுவோம் என்று முரளிதர ராவ் கூறியுள்ளார். இவரது பேச்சு தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner