எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும்!

மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்;

இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு!''  என்பது தவிர்க்க முடியாததாகிவிடும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

பன்வாரிலால் புரோகித் போன்ற பெரிய மனிதர்கள்'' ஆளுநர் பதவியில் தொடருவது விரும்பத்தக்கதல்ல. மத்திய அரசு அவரைத் திரும்பி அழைத்திடவேண்டும். வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு!'' என்ற குரலும், அறவழிக் கிளர்ச்சிகளும் தவிர்க்க இயலாதவையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஆளும் அ.தி.மு.க. - பா.ஜ.க. தவிர...

தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனியே ஒரு இணை அரசாங்கத்தினை  - மாநில அரசின் அரசியல் சட்ட நடைமுறை - மரபுகளை மீறி தானே எல்லாம்' என்ற போக்கில் நடத்தி வருவதற்கு திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் (ஆளும் அ.தி. மு.க. - பா.ஜ.க. தவிர) தங்களது ஜனநாயக ரீதியான எதிர்ப் பினைத் தெரிவித்து வருகின்றன!

முன் எப்போதும் நடந்திராத முறையில் ஆளுநரே துணைவேந்தர் பதவிகளுக்கு ராஜ்பவனில்' நேர் காணல் நடத்தும் முறையும், நியமிக்கப்படும் துணை வேந்தர்களின் நியமன ஆணையை ஆளுநரே அழைத்து சம்பந்தப்பட்டவரிடம் வழங்குவதுமான புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது.

அரசியல் சட்டம் - மரபுகளின் மாண்புகளைக் குறைப்பதாக உள்ளன

இவைகளையெல்லாம் தாண்டி, எல்லா மாவட்டங் களுக்கும் சென்று அலுவல் ஆய்வு செய்யும் முறை மாநில உரிமை பறிப்புக்கான வெளிப்படையான பிரகடனம்; இதை எதிர்க்காமல் ஆதரித்துவரும் ஆளுங் கட்சியின் சர்வ அடிமைத்தனப் போக்கு எல்லாம் மக்களாட்சி - அரசமைப்புச் சட்டம் - மரபுகளின் மாண்பு களைக் குறைப்பதாக உள்ளன!

தமிழ்நாட்டைத் தலைகுனிய வைத்துள்ளன

இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல், மதுரை காம ராசர் பல்கலைக் கழக வரலாற்றில் ஒரு தீராத பழியும், கறையும் ஏற்பட்டுள்ள நிகழ்வு ஒரு உறுப்புக் கல்லூரியின் பேராசிரியை, பயிலும் மாணவிகளிடம், மற்றவர்களிடம் இணக்கமாக' - குறிப்பாக மேலதிகாரிகளிடம் அவர்கள் இச்சையை பூர்த்தி செய்து  நடந்துகொண்டால், உங் களுக்குப் பல நன்மைகள் - வளர்ச்சிகள் ஏற்படும் என்ற அறிவுரை கூறி, அவரே அத்தகைய செயல்களுக்கு முக வராகவும் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, அலைபேசி பதிவுகள் ஆதாரங்களாக உள்ளன என்ற  அசிங்கமான அருவருப்புச் செய்திகள் தமிழ்நாட்டைத் தலைகுனிய வைத்துள்ளன.

ஆளுநரின் அநாகரிகச் செயல்!

பல்கலைக் கழகங்களுக்கு வேந்தர் நானே என்ற தகுதியில் ஒரு விசாரணைக் குழுவினை அமைத்த ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் அவர்கள் கூட்டிய செய்தியாளர்கள் கூட்டத்தில், லட்சுமி சுப்ரமணியம் என்ற தி வீக்' ஆங்கில வார ஏட்டின் செய்தியாளர் ஏதோ ஒரு முக்கிய கேள்வியைக் கேட்டபோது, அதற்குப் பதிலளிக்காமல் எழுந்து சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள், அந்தச் செய்தியாளரின் கன்னத்தைத் தட்டிப் பாராட்டு தெரிவித்ததுபோல் நடந்துகொண்ட முறை, அப்பெண் செய்தியாளர் உள்பட பத்திரிகையாளப் பெருமக்கள், எவராலும் ஏற்றுக் கொள்ளப்படாததோடு, கண்டனத்திற்கும் உரியதாகி இணைய தளங்களில் படங்கள் வழிந்தோடின.

மாநில ஆளுநர் ஒருவர் இப்படி தனக்கு வயதாகி விட்டது; பேத்தியாக நினைத்து செல்லமாகத் தட்டி அல்லது கன்னத்தைத் திருகி அன்பைத் தெரிவித்தார் என்ற சமாதானம் - விளக்கம் பலராலும் சரிதான்' என்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மன்னிப்பை ஏற்றார்; விளக்கத்தை மறுத்தார்!

உடனே இதுகுறித்து கண்டனங்கள் பல தரப்பிலி ருந்தும் எழுந்தவுடன், சுதாரித்துக் கொண்ட' ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒரு கடிதம் அப்பெண் செய்தி யாளருக்கு எழுதி வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளார்!

அப்பெண் செய்தியாளர் ஆளுநரின் மன்னிப்பை ஏற்றார் என்றாலும், அவரது விளக்கத்தை ஏற்க மறுத் துள்ளார். அவரது உள் எண்ணம் (Intention) பற்றி கூறியுள்ளதை ஏற்க மறுத்துள்ளார்.

இவ்வளவு அசிங்கம், அருவருப்பு, ஒரு மாநில ஆளுநர் அளவில் நடைபெற்றிருக்கலாமா? செய்வதைச் செய்துவிட்டு மன்னிப்புக் கோரினால், அக்குற்றச் செய லின் தன்மை மாறிவிடுமா?

கிரிமினல் குற்றங்களில் ஒன்று!

இ.பி.கோ. செக்ஷன்களில் ஒன்று Outraging the modesty of women' - பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது' கிரிமினல் குற்றங்களில் ஒன்றாகும்! இது தண்டனைக்குரிய குற்றமாகும்!

ஆளுநர்கள் மீது குற்றச் செயலுக்கு, நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எவ்விதத் தடையும் (Immunity) கிடையாது!

மேகாலயா ஆளுநர் சண்முகநாதனின் கிருஷ்ண லீலைகள்!'

பா.ஜ.க. ஆட்சியில் (மோடி அரசால்) நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்களில் இப்படி பெண்களிடம் கிருஷ்ண லீலைகள்' நடத்தியதுபற்றி மேகாலயா ஆளுநராக இருந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியான சண்முகநாதன் என்பவர்மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து, அவரை ராஜினாமா செய்யச் சொல்லி, கமுக்கமாக வெளியே அனுப்பிவிட்டது மோடி அரசு.

இதுபோன்ற நிகழ்வுகள், தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை மிகவும் வெட்கப்படவேண்டியவை.

வயதானவர்கள்தான் பெரும்பாலும் பாலியல் வக்கி ரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு வெளிவந்த பல செய்திகளே சாட்சியாகும்!

தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு!''

வேலிகளே பயிரை மேயும் அவலம் தொடரலாமா?

தமிழ்நாட்டிற்கு இனிமேல் ஒரு கணமும் இந்த பன்வாரிலால் புரோகித் போன்ற பெரிய மனிதர்கள்'' ஆளுநர் பதவியில் தொடருவது விரும்பத்தக்கதல்ல. மத்திய அரசு அவரைத் திரும்பி அழைத்திடவேண்டும். வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு!'' என்ற குரலும், அறவழிக் கிளர்ச்சிகளும் தவிர்க்க இயலாதவையாகும்!

 

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.
19.4.2018            

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner