எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, ஏப்.19 கருநாடகா சட்டமன்ற தேர்தல்  மே 12 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான காங்கிரசு வேட்பாளர்கள் பட் டியல் ஒரே தடைவையாக வெளி யிடப்பட்டுவிட்டது. பாஜகவின் 82 வேட்பாளர்கள் அடங்கிய 2 ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டில் சட்ட விரோத சுரங்க ஊழல் வழக்கில் எடியூரப்பா அமைச்சரவையில் இருந்து பதவிநீக்கம் செய்யப் பட்ட ஜனார்த்தன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். இவரது சகோதரர் சோமசேகர ரெட்டி பெல்லாரி தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக அறி வித்துள்ளது. ஜனார்த்தன ரெட்டி சிறையில் இருந்தபோது அவரை பிணை யில் விடுதலை செய்ய நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சோமசேகர ரெட்டி கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் விவேக் ரெட்டி கூறுகையில், பெல்லாரி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சி சமரசம் செய்து கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

காங்கிரசு கட்சி செய்தித் தொடர்பாளர்ரந்தீப்சுர்ஜிவால் டுவிட்டரில், எடியூரப்பா அரசு ஊழல் மிகுந்த அரசு என்று அமித்ஷா கூறியது தற்போது உண்மையாகிவிட்டது. ஜனார்த் தன் ரெட்டி சகோதரர் சோமசேகர் ரெட்டி பாஜக சார்பில் பெல்லாரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். இதேபோல் எடியூரப்பா ஆட்சிகாலத்தில் நில ஊழல் வழக்கில் கையும் களவுமாக சிக்கிய கிருஷ்ணய்யா ஷெட்டிக்கும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner