எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

>> ஜம்மு - காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள் இரு பி.ஜே.பி. அமைச்சர்கள். நிலைமை மோசமான நிலையில், அமைச்சரவையில் உள்ள 9 பி.ஜே.பி. அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் உத்தரவு. (அப்படிப் பார்க்கப் போனால், பிரதமர் நரேந்திர மோடியே தேற மாட்டாரே - நினைவிருக்கிறதா குஜராத் கலவரம்?).

>> எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனுதாக்கல்.

(இவர்களை விழிக்க வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி!).

>> கல்லூரி பேராசிரியை நிர்மலா மீதான வழக்கு சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றம்.  (சி.பி.அய். விசாரணை தேவையில்லை என்று ஆளுநர் ஏன் கூறவேண்டும்?).

>> கால்நடை விற்பனைக்குத் தடைச் சட்டம் கொண்டு வந்த மத்திய பி.ஜே.பி. அரசு அதனை விலக்கிக் கொண்டுள்ளது.

(கால்நடையிலிருந்து கொஞ்சம் ஆறாவது அறிவுக்கு வந்ததற்குப் பாராட்டு!).

>> ராமர் - சீதை குறித்து கருத்துச் சித்திரம் தீட்டிய அய்தராபாத் நிருபர்மீது வழக்கு.

(நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை மனிதாபிமான மற்ற முறையில் கொடும் விலங்குகள் வாழும் காட்டில் கொண்டு போய் விட்ட இராமனே பெருங்குற்றவாளி - இந்த லட்சணத்தில் இராமன் - சீதைபற்றி கார்ட்டூன் வெளியிட்டவர் எப்படிக் குற்றவாளியாவார்?).

>> உத்தரப்பிரதேசத்தின் எட்டா நகரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை.
(பா.ஜ.க. ஆட்சியில் இதுபோன்ற தொடர் நிகழ்ச்சிகள் நிகழ்வது ஆச்சரியத்துக்கு உரியதல்லவே. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனு அத்தியாயம் 9; சுலோகம் 17)).

>> ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு - பொதுமக்கள் அவதி!

(ரூபாய்  மதிப்பிழப்பு செய்து பொதுமக்கள் மிகப்பெரிய அவதிக்கு ஆளாக்கப்பட்டும், இடைத்தேர்தலில் பி.ஜே.பி. வெற்றி பெற்றதே - அந்தத் திமிரில் என்ன வேண்டுமானாலும் செய்யும் மோடி ஆட்சி?).

>> நீட்' தேர்வில் தமிழகத்தில் உள்ள தேர்வு மய்யத்தில் பதிவு செய்தவர்களுக்கு கேரளாவில் மய்யம் ஒதுக்கப்பட்டுள்ளது.

(ஏன் இமாச்சலப்பிரதேசத்தில் ஒதுக்குவதுதானே!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner