எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு 61 நாள்கள் சிறையில் தள்ளப்பட்டவர் காஞ்சி சங்கர மடத்தின் 69 ஆம் பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரசுவதி. சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து விடுதலையானார் என் பது வேறு சங்கதி.

அவர் மரணம் அடைந்தவர் என்றதும், ஆகா - ஊகா' என்று புகழ்கிறார்கள். சங்கர மடத்தின் முகத்தைக் கவ்வியிருக்கும் களங் கம் அப்படியாவது கழுவப்படாதா? என்ற நப்பாசை அவர்களுக்கு - அவாள் ஏடுகளுக்கு.

அண்மையில் அவர்கள் ஆரம்பித்திருக்கும் காமதேனு' என்னும் ஒரு வார ஏடு  பல வண்ணப் படங்களுடன் அவரைப் பற்றி சில தகவல்களை வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.

ஜாதி, மதம் பாராமல் அனைவரையும் சமமாக அணுகியவராம். தலித் மக்களிடமும் அன்பு செலுத்தியவராம்! உண்மைதானா?

காஞ்சி மடத்துக்கு சுப்பிரமணியசாமி வந்தபோது, அவர் எந்த இடத்தில் அமர்த்தப்பட்டார்? மத் திய அமைச்சர் பொன்.இராதா கிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்ட இடம் என்ன என்பது ஊர் அறிந்த கதை.

சுடுகாட்டில்கூடஜாதி இருக்க வேண்டும் என்பதிலே ஜாக்கிரதையாக இருந்தவர்.

தனித் தனி சுடு காடுகளுக்கு அவர் சொன்ன கார ணம் என்ன தெரியுமா?

எல்லா வகுப்பினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததுதான் அதற்குக் காரணமாம். மதுரையில் இவ் வாறுபேட்டியளித்ததைஅப் பொழுதேவிடுதலை'(8.3.1982, பக்கம் 1)வெளியிட்டு ஜெகத்குருவின் முகத்திரையைக் கிழித்த துண்டு. அதே பேட்டியில் இன் னொன்றையும் கூறினார்.

என்ன தெரியுமா?

மின்சார சுடுகாடு இந்து தர் மத்துக்கு எதிரானது' என்றும் சொன்ன அஞ்ஞானவாதி இவர்!

இவர் வார்த்தைக்கு என்ன மரியாதை? பார்ப்பனர்களேகூட மின்சார சுடுகாட்டில்தான் எரிக் கப்படுகிறார்கள்.

இந்தப்புதியவார ஏடு இன் னொன்றையும் கூட வெளியிட் டுள்ளது.

என்ன தெரியுமா?

காஞ்சியில் சங்கர மடத்தைச் சுற்றி பல இஸ்லாமியர்கள் வசித் தனர். அடிக்கடி அவர்களை அழைப்பார் ஜெயேந்திரர்- வசதிகள் குறித்தெல்லாம் கேட்டு  தேவையானதை செய்து கொடுப் பாராம்.

உண்மையிலேயே அவர் உள்ளத்தில் இஸ்லாமியர்கள் மீதான வன்மம் என்ன தெரியுமா?

இதோ ஓர் எடுத்துக்காட்டு.

அண்மையில் மதுரைக்கு விசிட் அடித்தார் ஜெயேந்திர சரசுவதி. அவரைச் சந்தித்து ஆசி வாங்கிய பக்தர்கள் கூட்டத்தில் ஒருவர் மாம்பழங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு, இது உரம் போடாமல் இயற்கையாகக் காய்த் துப் பழுத்தது - பெயர் இமாம் பசந்த்' என்று சொன்னதுதான் தாமதம்.

மாம்பழத்திற்கு இப்படி ஒரு பெயரா? பரவாயில்லை, இதையும் இராம் பசந்த்'துன்னு மாத்திட்டாப் போச்சு'' என்றார். ஜூனியர் விகடன்'

ஒரு மாம்பழத்தின் பெயரில் இஸ்லாம்' கலந்திருக்கிறது என்பதைக்கூட சகிக்க முடியாது ராம்' என்று மாற்றவேண்டும் என்பவரா இஸ்லாமியரை மதித்தவர்?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner