எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண்கள், சிறுபான்மையினர், தலித் மக்கள் இவர்களைப் பிரித்து வைத்து மோடி அரசியல் நடத்துவது ஆபத்தானது!

மோடியை என்னிடம் பாடம் கேட்கச் சொல்லுங்கள்

ஆங்கில ஏட்டுக்கு மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி

புதுடில்லி, ஏப்.20 பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகளைப் பிரித்து வைத்து மோடி அரசியல் நடத்துவது ஆபத்தானது என்றும், இதுகுறித்துப் பிரதமர் என்னிடம் பாடம் கேட்கலாம் என்றும் மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஆங்கில ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இந்தியாவையே உலுக்கிய மூன்று பாலியல் வன் கொடுமைகள் குறித்து கடுமையான கோபத்தில் மீண்டும் மோடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் மன்மோகன் சிங். ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரசுக்கு'' மேனாள் பிரதமர் டாக்டர் மன் மோகன்சிங் அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:

கேள்வி: கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உங்கள் கருத்து? பதில்: சந்தேகமே வேண்டாம், மோடி அரசு தோற்று விட்டது.  பெண்கள் பாதுகாப்பில் மோடி அரசு பகிரங்கமாக தோற்று விட்டது. மோடி குறிப் பிட்டிருந்தார் இந்தியாவின் மகள்கள் இருவருக்கும் நீதி கிடைக்கும்'' என்று. இப்படி நீதி கிடைக்கும் என்று அவர் கூறுவதற்கே இரண்டு நாட்கள் ஆகின என்றால், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும் என்று பாருங்கள். இந்த விவகாரத்தில் மோடி என்னிடம் வந்து பாடம் படிக்கவேண்டும். என் அறிவுரையைக் கேட்கவேண்டும். அந்த நிலைமையில் தான் அவர் இருக்கிறார். அவர் அடிக்கடி என்னைக் குறை கூறுவார், நையாண்டி செய்வார். நான் அமைதி யானவன் தான்; ஆனால், பேசவேண்டிய நேரத்தில் நான் கட்டாயம் பேசுவேன். அதை அவரே நேரடி யாகப் பார்த்து இருக்கிறார்.

2012 ஆம் ஆண்டும் டில்லியில் இளம்பெண் ஒரு வருக்கு நடந்த பாலியல்  வன்கொடுமையின் போது காங்கிரசுதான் ஆட்சியில் இருந்தது. அடுத்த கணமே குற்றவாளிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆனால், கத்துவா மற்றும் உன்னாவ் விவகாரத்தில் மோடி அரசு இதுபோன்று ஒரு துரித நடவடிக்கை எடுக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி, கூறி யது போல் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை உடனடியாக நிறைவேற்ற சட்டம் கொண்டு வர வேண்டும். கத்துவா சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடு விக்கக் கோரி, 2 பிஜேபி அமைச்சர்கள் பேரணியில் கலந்துகொண்டது மன்னிக்க முடியாத செயல். இந்த விவகாரத்தில் மெகபூபா உடனடியான நடவடிக்கையை எடுக்க அவரின், கூட்டணி அமைச் சரவையில் இடம்பெற்றுள்ள பிஜேபி அமைச்சர்கள் தடையாக நிற்கலாம்; யாருக்குத் தெரியும்.

8 வயது சிறுமி கோயில் கருவறையில் வைத் துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை விட, இந்தியாவிற்கு வெட்கக்கேடான செயல் வேறு இருக்குமா? இந்தியாவில், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இவை தடுக்கப்படாமல் இருந்தால் ஒரு நாள் ஜனநாயகமே அழிந்து விடும்!

கத்துவா மற்றும் உன்னாவ் விவகாரம் மட்டு மில்லை; பாஜகவினரின் பல்வேறு கொடூரமான செயல்களையும் மோடி கண்டும் காணாமல் தான் இருக்கிறார். மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறி யுள்ளது. சிறுபான்மையினர், தலித் மக்கள் என்று இவர்கள் பிரித்து வைத்து அரசியல் நடத்துவது எற்றுக் கொள்ள முடியாதது, நீதியும் தற்போது இருக்கும் அரசிற்கு சாதகமாகவே செயல்படுகிறது. கேள்வி: கத்துவா வழக்கில் 2 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அது பற்றி...

பதில்: எனக்கு அபாரமான அறிவு இல்லை. ஆனால்,  அந்த அமைச்சர்கள் இருவரும்  அவர் களின் தலைமைக்குக் கட்டுப்பட்டு தான் இதை செய்தார்களா என்று  தெரியவில்லை. மேலிடம் அவர்களிடம் என்ன கூறியது என்று யாருக்குத் தெரியும்?

கேள்வி: கடந்த சில ஆண்டுகளாக சிறு பான்மையினர் மற்றும் தலித்துக்களின் மீது நடத்தப்படும் வன்முறை குறித்து?

பதில்: வெட்கக்கேடானது.  சமீபத்தில் சண்டிகரில் நடைப்பெற்ற கூட்டத்தில் கூட இதைப்பற்றி கூறியிருந்தேன். சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் இவர்கள் மூவர்மீது நடத்தப்படும்  வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை. இந்தியாவில் இவர்கள் மூவரும் வாழுவதற்கான சூழ்நிலையே தற்போது மாறியுள்ளது.

கேள்வி: தற்போது இந்தியாவை அதிர்ச்சிக்குள் ளாக்கி வரும் வங்கி ஊழல் குறித்து? பதில்: டிஜிட்டல் இந்தியாவில் வங்கித் துறை நல்ல முறையில் செயல்படவில்லை என்பதற்கு இதுவே ஒரு சான்று. இது தனிப்பட்ட பிரச்சினை இல்லை. பொது பிரச்சினை. இந்தியாவின் 2 ஆம் மிகப்பெரிய வங்கியே இத்தகைய செயலில் ஈடுப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. வெளிப்படையாக இது வங்கித் துறை திருத்தியமைக்கப்பட வேண்டியதன் பிரதிபலிப்பு என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி:: கத்துவா விவகாரத்தில் முதலமைச்சர் மெகபூபா முப்தி சரியாக செயல்படுவாரா?

பதில்:முதலமைச்சர்மெகபூபாவால்இந்த விவகாரத்தை இன்னும்கூட தீவிரமாக செயல் படுத்த முடியும். ஆரம்பத்திலேயே அவர் இந்த விவகாரத்தைப் பெரிதுப்படுத்தி உறுதியான நிலைப் பாட்டை எடுத்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு கூட்டணி அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகிறார். எனவே, கூட்டணியின் தலைவர் என்ற முறையில், எந்தவொரு நேரத்திலும் எந்த இழப்பும் இன்றி குற்றவாளியை அவர் தண் டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி: மோடி அரசால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியுமா?

பதில்:  20 மாநிலங்களில் பிஜேபி அதிகாரத்தில் உள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக கையாளுவது மாநில அரசாங்கங்களின் பொறுப் பாகும். எனவே, பா.ஜ.க. அரசு, சட்டம் ஒழுங்கை முறையாக  அமல்படுத்தி, சிறுபான்மையினர் மற் றும் தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கலாம்.

கேள்வி: கத்துவா மற்றும் உன்னாவ் விவகாரத்தில் மோடியின்மவுனத்திற்குஎழுந்தஎதிர்ப்புகள் குறித்து?

பதில்: எதிர்பார்த்த ஒன்று; இந்த விவகாரத்தில் அவர் என்னிடம்  வந்து பாடம் கற்க வேண்டும். என் அறிவுரையையும் ஏற்க வேண்டும். மோடி அடிக்கடி என்னை சுட்டிக்காட்டுவது, நான் பேசாத முன்னாள் பிரதமர் என்று, ஆனால் அதே சமயத்தில் எந்த இடத்தில் பேச வேண்டுமோ அந்த இடத்தில் நான் பேசுவேன். அதை அவரே நேரில் பார்த்து இருக்கிறார்.

கேள்வி: ஊமை பிரதமர் என்று உங்களை பிஜேபியினர் அழைத்துள்ளனர், அது பற்றி?

பதில்: அவர்களின் இந்த கருத்தினால்தான் நான் நீண்ட காலமாக அரசியலில் வாழ்ந்து வருகிறேன். - இவ்வாறு மேனாள் பிரதமர் டாக்டர் மன் மோகன்சிங் அளித்த பேட்டியில் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner