எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரசு உள்ளிட்ட 7 கட்சிகள் தீர்மானம்

குடியரசுத் துணைத் தலைவரிடம் மனு அளித்தனர்!

புதுடில்லி, ஏப்.21 -இந்தியாவின் தலைமை நீதிபதியை  பதவி நீக்கக்கோரி இந்திய வரலாற்றிலேயே  முதன்முறையாக இந்திய நாடாளுமன்றத்தில்  தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் நீதி பதிகள்மீது குற்றச்சாட்டு கூறப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண் டும். உச்சநீதிமன்றநீதிபதிகள்மீதுஏற்கெ னவே இதுபோன்ற கண்டனத் தீர்மா னங்கள் கொண்டு வரப்பட்டபோதிலும் தலைமைநீதிபதிமீதுஇதுவரைகண் டனத்  தீர்மானம்  கொண்டுவரப்பட்ட தில்லை. ஆனால் முதல்முறையாக தற்போதைய தலைமை நீதிபதி  தீபக்  மிஸ்ராமீது  அத்தகைய தீர்மானம் கொண்டுவரப்படவிருக்கிறது. அண்மையில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளே அவருக்கெதிராக  போர்க்கொடி  உயர்த்தி குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர். மேலும்   நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரும்  வழக்கு உள்பட பல் வேறு வழக்குகளில் தலைமை நீதிபதி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு   வரு வதில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற  தலைமை  நீதிபதியை  பதவிநீக்கம் செய்யக் கோரி காங்கிரசு  உள்ளிட்ட 7 கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருகின்றன. இதற்கான மனுவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 67பேர்  கையெழுத்திட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவிடம் நேற்று (20.4.2018)  அளித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் மூத்தநீதிபதிகள் செல்லமேஸ்வர் உள்ளிட்ட நால்வர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராகக் குரல் கொடுத்ததை  அடுத்து நீதித்துறை வட்டாரத்தில் ஏற்பட்ட சலசலப்பு நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. வழக்குகளைஒதுக்கீடு செய் வதில் பாகுபாடு  காட்டப்படுவதாகவும் மூத்த    நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரம் நாடு  முழுவதும் எதி ரொலித்தது.

இந்திய  வரலாற்றில்  உச்சநீதிமன்ற  தலைமை  நீதிபதிக்கு  எதிராக  நாடா ளுமன்றத்தில்  உரிமைப்பிரச்சினை  கொண்டுவரப்படுவது இதுவே முதல் முறையாகும்.

 இந்நாள்...இந்நாள்...

1938 - கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நாள்

1964 - புரட்சிக்கவிஞர் மறைவு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner