எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப், 22 புத்தகக் கண்காட்சிகளில் இதுவரை இல்லாத புதுமையாக புத்தகக் காட்சியில் புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் செய்யும் அரங்கமாக இரண்டாவது நாளின் (21.4.2018) அமர்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் 6 ஆம் ஆண்டாக ஏப்ரல் 20 முதல் 25 வரையிலும் காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் நடைபெறும் சென்னை புத்தக சங்கமம் ஏப்ரல் மாதத்தின் சென்னையின் புதிய அடையாளமாக மாறியிருக்கிறது. இதன் இரண்டாவது நாளான 21 ஆம் தேதியில் மாலையில் புதுமையான முறையில் கருத்தரங்கம் முதல் முறையாக புத்தக விமாசன அரங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இதழாளர் அசோகன் (அந்திமழை) தலைமையேற்க, ரா.அருள்வளன் அரசு (காவேரி தொலைக்காட்சி) வீ.கும ரேசன் (தி மார்டன் ரேசனலிஸ்ட்) ஆறாவயல் பெரியய்யா (நக்கீரன்) பங்கேற்று புத்தகங்களை விமர்சனம் செய்து உரையாற்றினர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையவர்கள் என்பதால் பார்வையாளர்களுக்கு நல்ல விருந்து கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். காரணம், புத்தகங்களின் நிறைகளை மட்டுமே பேசுகின்ற புத்தகக் காட்சியில் புத்தகங்களின் குறைகளையும், படைப் பாளர்கள் படும் சிரமங்களையும், இதழ்களில் புத்தக விமர் சனங்கள் எப்படி எழுதப்படுகின்றன என்பன போன்ற தகவல்களும் பலரும் அறியாத ஒன்றாக இருந்ததால் பார் வையாளர்களுக்கு அதுவொரு புதுமையான அனுபவத்தைக் கொடுத்தது.

ஹைக்கூ கவிதையும் சுருங்கியது!

கோவி. கோபால் அனைவரையும் வரவேற்றுப் பேசி னார். அதைத்தொடர்ந்து அந்திமழை அசோகன் விமர்சன அரங்கைத் தொடங்கி வைத்தார். தொடக்கத்தில் பேசிய ரா.அருள்வளவன் அரசு ஹைக்கூ கவிதை வடிவில் நகைச் சுவை கலந்து தன்னுடைய கருத்துகளை எடுத்துவைத்தார். இறுதியில் புத்தகம் படித்தால் நல்ல பழக்கம் வரும் என்று கூறவில்லை. தீய பழக்கங்களைத் தவிர்க்க முடியும் என்று கூறி நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து ஆறாவயல் பெரியய்யா அவர்கள் தன்னுடைய கருத்துக்களால் பார்வை யாளர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார். அவரது நெல்லைத்தமிழும், ஆழ்ந்த அனுபவமும், ஆழமான பார்வையயும் ஒரு புதுமையான அனுபவத்தையும் கொடுத் தது. அவரது விமர்சனம் ரசிக்கத்தக்க விதத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ரசூல் அவர்கள் எழுதிய ஜனகனமனகன என்ற புத்தகத்திலிருந்து ஒரு ஹைக்கூ கவிதையைச் சொன்னார். அதாவது, கூடை நிறைய பூக்கள். கூவி விற்கிறாள் பூக்காரி . பரட்டைத்தலையோடு! இதையே எதற்காக கூடை நிறையப்பூக்கள்? பூவை விற்பவள் பூக்களைத்தான் வைத்திருப்பாள்! இதிலென்ன அய்யம்? ஆகவே, பரட்டைத்தலையோடு பூக்காரி! இந்த ஒற்றை வரியே மூன்று வரிகளின் பொருளைப் பேசிவிடுமே! என்றார். பார்வையாளர்கள் தம்மை மறந்து கை தட்டினர். மேலும் அதற்கு ஒரு செங்கல்லை எடுத்தால் கூட கட்டடம் விழுந்து விடுவதைப்போல, சொற்கள் அவ் வளவு நெருக்கமாக இருக்க வேண்டும்" என்று விளக்கம் கொடுத்தார். நாற்காலிக்கு பேசினாலும்  உயிர்பெற்ற பெரியாரின் கொள்கைகள்!

எது நல்ல கவிதை? எது மோசமான கவிதை? என்பது உள்பட பல்வேறு தகவல்களைச் சொன்னவர், இறுதியாக இதுபோன்ற கருத்தரங்கங்களுக்கு குறைந்த அளவே பார் வையாளர்கள் வருவதை சுட்டிக்காட்டி, இதுதொடர்பான அவரது நினைவிலிருந்து ஒரு அரிய வரலாற்றுச் சம்ப வத்தைச் சொன்னார். அதாவது, மும்பை தாராவியில் வாழ்ந்த பகுத்தறிவு கொள்கை வெறிபிடித்த பெரியார் பெருந் தொண்டர் சண்முகராசன் அவர்கள் தந்தை பெரியாரை அழைத்து நடத்திய ஒரு கூட்டத்தைப்பற்றிக் குறிப்பிட்டார். அதில் மைக்செட்காரர் உட்பட மொத்தமே ஏழுபேர்தான் அமர்ந்திருந்தனராம். அரங்கமோ ஆயிரம் பேர்களுக்கு மேல் அமரக்கூடியது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் வருத்தம் சொல்லித்தெரிய வேண்டிய தில்லை. ஆனாலும், தந்தை பெரியார், அங்கிருந்த வெறுமையான நாற்காலிகளைப்பார்த்தே 80 நிமிடம் பேசினாராம். என்று முடிக்கும் முன்னர் அரங்கத்தினர் தன்னெழுச்சியாக கைதட்டினர். அதற்குப்பிறகு அவர் சொன்னதுதான் இன்னமும் வியப்பாக இருந்தது. பெரியார் பேசியது செய்தியாகக்கூட எதிலுமே வெளியாகவில்லை. ஆனாலும் ஆறு மாதம் கழித்து டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிகையில் ஒரு பக்க அளவில் செய்தி வெளியிடப் பட்டது என்றும், அதன் பின்னர் பெரியாரின் பேச்சு நெருப்புபோல திகுதிகுவென மக்கள் மத்தியில் பற்றிக் கொண்டது என்று குறிப்பிட்டுவிட்டு, நாற்காலிக்கு பேசினாலும் அய்யாவின் பேச்சுக்கு உயிர் வந்துவிடும் என்றதும் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

புரட்சியாளர்கள் அனைவரும் புத்தகப்பிரியர்களே!

தொடர்ந்து தி மாடர்ன் ரேசனலிஸ்ட் பொறுப்பாசிரியர் வீ.குமரேசன் பேசும் போது, நூல் வாசிப்பு என்பது சுகமான அனுபவம் என்றும், ஒவ்வொரு வாசிப்பாளனுக் குள்ளும் ஓர் எழுத்தாளன் உறங்கிக்கொண்டிருக்கிறான் என்றும், பேச்சைவிட எழுத்து வலிமையானது என்றும், பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயில் சொன்னால் பயனில்லை. அதையே பேனாவில் மையில் கலந்து சொன்னால் மறுத்துச்சொல்ல ஆளில்லை என்ற பழைய திரைப்படப்பாடலை நினைவூட்டியும், தந்தை பெரியார் தொடர்ந்து பேசினாலும் அவர் பெரிதும் விரும்பியது புத்தகங்களைத்தான் என்றும்,  புரட்சியாளர் அம்பேத்கரும் புத்தகப்பிரியர்தான் என்றும் வரிசையாகக் குறிப்பிட்டுவிட்டு, தனஞ்செய் கீர் எழுதிய அம்பேத்கர் லைப் அண்ட் மிசன் என்ற புத்தகத்தை விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டு அதிலிருந்து சில அரிய வரலாற்றுக் கருத்துக்களை எடுத்துவைத்தார்.

தொடர்ந்து அந்திமழை அசோகன் ஒரு நல்ல விமர் சனம்தான் புத்தகத்தைப்பற்றிய கவனத்தை ஈர்க்கும் என்றும், போலிகளைக்காணும்போது நெற்றிக்கண்ணைத் திறக்க வேண்டும் என்றும் புதுமைப்பித்தன் சொன்னதை எடுத்தாண்டும், அந்தி மழை இதழ் சார்பாக புத்தக விமர் சனப்போட்டி வைத்திருப்பதை நினைவூட்டி இதுவரை 100க்கும் மேற்பட்ட புத்தகங்களைப்பற்றிய விமர்சனங்கள் வந்திருப்பதாகவும், பார்வையாளர்களும் தமிழில் வெளிவந்த எந்த புத்தகத்தைப்பற்றியும் விமர்சனம் செய்து அனுப்பலாம் என்றும் அழைப்பு விடுத்து தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

பரிசுகளும்! பாராட்டுகளும்!

நேற்றைய குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக சிட்லப்பாக்கம் ஆறுமுகம் என்பவருக்கு எஸ்.எம்.சில்க்ஸ் சார்பாக ஒரு பட்டுப்புடவையை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன் வழங்கினார். இரண்டாவது பரிசாக பவார் லைஃப் ஸ்டைல் சார்பில், சூளை ஏழுமலைக்கு தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்  செல்பேசியையும் வழங்கினார். தொடர்ந்து கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான க. சரவணன், பேராசிரியர் அய்யாசாமி, கோவி. கோபால் ஆகியோர் நினைவுப்பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர். நிகழ்ச்சியை சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப் பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நல்ல வகையில் இணைப்புரை வழங்கிச்சிறப்பித்தார். நிறைவாக கேள்விகள் வரவேற்கப்பட்டு அதற்கு பதில்களும் அளிக்கப்பட்டன. தோழர் சுரேஷ் நன்றி கூறி நிகழ்வை இனிதே  நிறைவு செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner