எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அவசர சட்டத்துக்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் புதுடில்லி, ஏப்.22  குழந் தைகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித் துள்ளார்.  காஷ்மீரின் கதுவா நகரில் சமீபத்தில் 8 வயது சிறுமி பலரால் கடத்தி செல்லப்பட்டு கூட்டாக பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது.

நாட்டில் சிறுமிகளை பாலி யல் வன் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவ தால் இக்குற்றங்களில் ஈடு படுவோருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண் டனை விதிக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தின.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டில் லியில் நேற்று   (21.4.2018) நடந்தது.  இந்த கூட்டத்தில், குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடை முறை சட்டம் மற்றும் போஸ்சோ சட்டத்தில் திருத்தம் செய்து அதை அவசர சட்டமாக பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப் பட்டது.  இந்த அவசர சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப் பட்டது.

மத்திய அமைச்சரவை ஒப் புதல் அளித்துள்ள இந்த அவசர சட்டத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் விசா ரணை குறித்தும் விரிவாக கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குழந்தை களுக்கு எதிரான வன்கொடு மைக்கு தூக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள் ளார்.  இதனை தொடர்ந்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner