எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்தராபாத், ஏப்.23 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்ட தீர்மானகரமான கட்சியாக இந்த மாநாட்டில் இருந்து வெளி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆட்சியை வீழ்த்துவதே எங்கள் பிரதான கடமை என்று அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

மாநாட்டில் கூடியிருந்த பிரதிநிதி களின் உற்சாக வாழ்த்து முழக்கங்களுக்கு இடையே சீத்தாராம் யெச்சூரி உரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி யின் பொதுச்செயலாளராக தேர்வு செய் யப்பட்டிருக்கும் நான், பொறுப்புமிக்க கடமைகளை நிறைவேற்ற என் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயல்படு வேன் என்று என் கட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் உறுதியளிக்கிறேன்.

இந்தமுக்கியமானமாநாட்டில்விரி வான விவாதங்கள் நடத்தி முக்கிய முடிவுகள்எடுத்திருக்கிறோம்.இதில் இருந்து ஒட்டுமொத்தமாக ஒரே ஒருசெய்தியைத் தான் சொல்ல வேண்டுமென்றால், எங்கள் வர்க்க எதிரிகளுக்குச் சொல்லிக் கொள்கிறோம், நாங்கள் இங்கிருந்து ஒன்றுபட்ட, தீர்மானகரமான கட்சியாக வெளி வந்திருக்கிறோம். நவீன தாராளமயக் கொள்கைகளைமூர்க்கத்தனமாகஅம லாக்கும்பாஜக,ஆர்எஸ்எஸ்ஆட்சி யின் வகுப்புவாத சக்திகள் நாட்டின் மதச்சார்பற்ற,ஜனநாயகக் கட்டமைப் பைத் தகர்க்க அனுமதிக்க மாட்டோம் என்று நாட்டுக்கும், இந்த உலகத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற அமைப்புகளையும் இந்த ஆட்சியாளர்கள் சீர்குலைப்பதை மக்கள் போராட்டங்களின் அழுத்தத்தின் மூலம்தடுத்து நிறுத்துவோம். நாட்டு நலன்,மக்கள் நலன் இரண்டையும் பாதுகாத்து புதிய இந்தியாவைப் படைப்போம்.பாரதிய ஜனதா அரசை வீழ்த்துவதுதான் எங்கள் பிரதான கடமை. நம்முன் மிகப்பெரும் போராட் டங்கள் காத்திருக்கின்றன என்று உரை யாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner