எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய ஆட்சி என்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்

வருணிக்கிறார் சத்ருகன் சின்கா

பாட்னா, ஏப்.23- யஷ்வந்த் சின்காவைத் தொடர்ந்து, சத்ருகன் சின்காவும் பாஜக-வுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளார். மத்தியில் அலிபாபா மற்றும் 40 திருடர்களின் ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், பாஜக-வினர் முடிந்தால்என் மீது நடவடிக்கை எடுத்துப் பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார். பாஜக-வின் மூத்த தலைவரான அத்வானியை புறந்தள்ளி விட்டு, மோடிபிரதமர் ஆனதிலிருந்தே அக்கட்சியைச்சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, நடிகர் சத்ருகன் சின்கா எம்.பி. ஆகியோர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அண்மையில் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டபோது, மோடிக்கு எதிராக பகிரங்கமாக தங்களின் கருத்தை வெளியிட்டனர். இந்நிலையில், யஷ்வந்த் சின்கா பாஜக-வில் இருந்து விலகுவதாக சனிக்கிழமையன்று அறிவித்தார். அவர் கட்சியை விட்டுப் போக வேண்டியவர்தான் என்று பாஜக-வும் கூறிவிட்டது.

இந்நிலையில் நடிகர் சத்ருகன் சின்கா பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து இருப்பதுடன் கட்சிக்கு சவால் விடுத்துப் பேசியுள்ளார். நியூட்டனின் 3- ஆவது விதியின்படி ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்கும் என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ள அவர், மத்தியில் இருப்பது அலிபாபா மற்றும் 40 திருடர்களின் அரசு என்பதை மக்கள் தெரிந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். முடிந்தால் அவர்கள் என் மீது நடவடிக்கை எடுத்துப் பார்க்கட்டும் என்றும் கூறியுள்ளார்.3 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

அர்ச்சகரின் உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை, ஏப்.23 சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள கோவில் அர்ச்சகரின் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், கோவிலுக்கு வந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

குறிப்பிட்ட சிறுமி தினமும் கோவிலுக்கு செல்வார். திடீரென்று கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். ஏன் கோவிலுக்குப் போக மறுக்கிறாய்? என்று அவரது பெற்றோர் கேட்டபோது, பூசாரி மாமா உதயகுமார் என்னிடம் தவறாக நடக்கிறார். அதனால் நான் கோவிலுக்குப் போக மாட்டேன் என்று சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் போக்சோ (சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து உதயகுமாரை விசாரித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய அரசு போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்றும், அதனால் இப்போதைக்கு அந்த சட்டத்தின் கீழ் உதயகுமார்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர்  தெரிவித்தனர். மேலும் உதயகுமார் மீது பாலியல் வன்முறை குற்றம் சாட்டப்படவில்லை என்றும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.ஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் இதுதான்

சுரங்க மாபியா-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி

பெங்களூரு, ஏப். 23 - கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றகதையாக பாஜக அலைந்து கொண்டிருக்கிறது. ஜாதி, மதம், ஊழல், மோசடி, வன்முறை...இப்படி எதைப் பயன்படுத்தியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா துடித்துக் கொண்டிருக்கிறார். பாஜக-வுக்கும் ஜனார்த்தன ரெட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கடந்த மாதம் கூடபாஜக தலைவர் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால், தற்போது சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜனார்த்தன ரெட்டியின்இரண்டு சகோதரர் களுக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சீட் வழங்கியுள்ளது. ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமான சிறீராமுலு என்பவருக்கும் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேள் விகள் எழுந்தபோது, ஜனார்த்தன ரெட்டிக்கும் கட்சிக்கும்தானே தொடர்பில்லை; அவரது சகோதரருக்கு சீட் கொடுப்பதில் என்ன தவறு? பாஜகவினர் சிலர் சமாளித்தனர். ஆனால், சிறீராமுலு-வின் வேட்புனுத் தாக்கல் பேரணியில் ஜனார்த்தன ரெட்டி சகல ஜபர்தஸ்துகளுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

இதையொட்டி பொதுக்கூட்டம் ஒன்று நடந்த நிலையில், ஜனார்த்தன ரெட்டியை மேடைக்கு வரச் சொல்லி எடியூரப்பா அழைப்பின் பேரில் மேடையேறி மத்தியப் பிரதேச முதல்வரும் வியாபம் ஊழல் புகாருக்குச் சொந்தக்காரருமான சிவராஜ்சிங், நில ஒதுக்கீட்டு ஊழல் வழக் கில் தொடர்புடைய எடியூரப்பா ஆகியோருடன் நிழற்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.அடுத்ததாக பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி பிரச்சாரத்திலும் ஈடுபடப் போகிறாராம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner