எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரியா- மெரினாவா எது முக்கியம்?
கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்

சென்னை, ஏப். 25 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்த சென்னை மாநகர காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என கூறியிருந்தது. அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நேற்று (24.4.2018) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி விவகாரத்தில் உரிமை கோருவதை விட மெரினா கடற்கரையை பராமரிப்பதுதான் முக்கியமா? என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு உரிமை உண்டு. கட்டுப்படுத்த இல்லை எனவும் கூறினர். பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடும் போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனவே பண்டிகையை தடை செய்ய வேண்டும் என கோர முடியுமா? என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

அய்யாக்கண்ணும் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

===================

உணவு சமையல் பாத்திரங்கள் கழிவறையில் வைக்கப்படும் அவலம்

டமோ, ஏப்.25 மத்திய பிரதேச மாநிலம் டமோ பகுதியில் உள்ள ஓர் அரசு பள்ளியில் கழிவறை முன் மாணவர்களுக்கான மதிய உணவு தயார் செய்யப்படுகிறது. பொருட்களை வைப்பதற்கு தனியாக அறை இல்லாததால், சமையல் செய்த பின் உபகரணங்கள் அனைத்தும் பள்ளியின் கழிவறையிலேயே வைக்கப்படுகிறது.  இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும் போது, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள சுய உதவி குழுக்கள் மீது குற்றம்சாட்டுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோபால் பார்கவ் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner