எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் கள்ளழகரின் மண்டகப் படியா?

சட்ட விரோத செயலை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கு

மதுரை,ஏப்.25மதுரைமாவட்டநீதிமன்ற வளாகத்திற்குள் கள்ளழகர் விழாவை யொட்டி இந்து அறநிலையத்துறை அனுமதியோடு மண்டகப்படி நடத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து மதுரை மாநகர திராவிடர் கழக செயலாளர் ஏ.முருகானந்தம் வழக்கினை தொடுத் துள்ளார்.

இது குறித்து சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி, இந்து அற நிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப் பப்பட்டுள்ள நோட்டீஸ் வருமாறு:

அனுப்புநர்:

ஏ.முருகானந்தம்
த/பெ.அய்யாவு
எண். 3, பி.டி.ராஜன் சாலை,
5 ஆவது குறுக்குத் தெரு,
நரிமேடு,
மதுரை.

பெறுநர்:

1.    Hon'ble Chief Justice of Tamilnadu
Madras High Court,    
Chennai.

2.    Hon'ble District Judge.
Madurai District Court,
Madurai.

3.    The Commissioner
HR & CE Department.
Chennai

4.    The Joint Commissioner,
HR & CE Department
Madurai.

5.    The President,
Madurai Bar Association,
District Court Campus.
Madurai.

6.    The Secretary,
Madurai Bar Association,
District Court Campus.
Madurai.
Respected Sir/Mom.

நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். மதுரை மாவட்ட திராவிடர் கழக மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். 23.4.2018ஆம் தேதி தமிழ் நாளிதழில் வெளியாகி உள்ள செய்தியின் படி எதிர்வரும் 29.4.2018ஆம் தேதி ஏப்ரல் மாதம் நாளது தேதியில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கள்ளழகர் திருவிழாவின் ஒரு நிகழ்வாக மண்டகப்படி (திருக்கண்) நிகழ்வு நடைபெறுவதாக உள்ளது.

மேற்படி நிகழ்வினை நடத்துவதற்காக மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தில் தீர் மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், அதனை ஆதரித்து HR & CE உதவி ஆணையர் உத்தரவிட்டிருப்பதாகவும், கூறப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். மேற்படி தீர்மானமும், அதற்கு ஆதரவான உத் தரவு என்பது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். நம்நாடு மதச்சார்பற்ற நாடாகும். நமது அரசமைப்பு சட்டமும், மதச்சார்பின்மையைத்தான் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒரு குறிப் பிட்ட மத நிகழ்வுக்கு மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்கம் மேற்படி நிகழ்வை நடத்த முன்வருவதும், அதற்கு இந்து அறநிலையத்துறை இசைவு தெரிவித்திருப்பதும் குறிப்பாக மதச்சார்பின்மையை காப்பாற்றுவதற்கு அரணாக உள்ள நீதிமன்றமே இதுபோன்ற மதச்சார்புள்ள ஒரு நிகழ்வுக்கு நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அனுமதி வழங் குவது என்பது முற்றிலும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இவ்வாறு அனுமதிஅளிக்கும்பட்சத்தில்மற்ற மதத்தினரும் இதுபோன்ற மத நிகழ்வு களை நீதிமன்ற வளாகத்திற்குள் நடத்துவதற்கு முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதனால் எதிர்வரும் காலங்களில் மதமோதல்களுக்கான இட மாக நீதிமன்ற வளாகம் அமைவதற் கான வாய்ப்பு ஏற்படும்.

மேலும் மதுரை மாவட்ட வழக் குரைஞர் சங்கமும், நீதிமன்றமும் ஏறத் தாழ 145 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டதாகும். அதில் முதல் முறையாக இதுபோன்ற மத நிகழ்வுக்கு ஆதரவாக செயல்படுதல் என்பது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். மேலும் இதன் பொருட்டு பல்வேறு அரசாணைகள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக G.O. MS. No. 426 Dated 13.12.1993 இல் எந்த ஒரு மத நிகழ்வையும் அரசு சம்பந்தபட்ட அலுவலகத்தில் நடத்தக்கூடாது என தெளிவாக கூறியுள்ளது.

மேலும் குறிப்பாக அரசுக்குச் சொந்தமானஅலுவலகங்களிலோ, அரசு கட்டடங்களிலோ, எந்தமத வழிபாட்டு கோயில்களோ, எந்தவித மத வழிபாட்டு கடவுள்களுடைய படங்களோ இடம்பெறக் கூடாது என தமிழக அரசு ஆணை உள்ளது. அரசாணையை மீறும் வகையில் பல்வேறு அரசு அலுவலகங்களிலும், குறிப்பாக நீதிமன்றங்களிலும் இந்து மதக்கோயில்களும், இந்து மத கடவுள் களின் படங்களும் குறிப்பாக நீதி மன்ற வளாகத்தில் அனுமதிப்பது என்பது மதச்சார்பற்ற அரமைப்பு சட் டத்திற்கு எதிராக சவால் விடுவதாக அமைந்துள்ளது. மேலும் நீதிமன்றம் உட்பட எந்த ஒரு அரசு அலுவலகமும் மதச்சார்பின்மைக்கு எதிராக இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவோ, பங்ககேற்பதோ கூடாது என்பதற்கான வாய்ப்பை  ஏற்படுத்த வேண்டும்.

எனவே, இதுநாள் வரை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் மதச்சார்பின்மையை காக்கும் அமைப் பாக செயல்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக அரசமைப்பு சட்டத்தை மீறும் வகையில் நீதிமன்றவளாகத்திற்குள் கள்ளழகர் திருவிழா போன்ற அனைத்து விதமான திருவிழாக்களையும் அனு மதிக்காமல் தடைசெய்து நீதிமன்ற வளாகமானது மதச்சார்பற்ற வளாகம் என்பதை உறுதி செய்து உத்தரவிடுமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு
அ.முருகானந்தம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner